tamilnadu

img

பூமிக்குஅடியில் மின்இணைப்புகள் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்

நாமக்கல், ஏப்.2-

அனைத்து விவசாய கடன்களும் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கொமதேக வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜ் வாக்குறுதி அளித்துள்ளர்..திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜ் போட்டியிடுகிறர். இந்நிலையில், சேந்தமங்கலம் ஒன்றியப் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், சேந்தமங்கலம் ஒன்றிய பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக விளங்குகிறது. முற்றிலும் அனைத்து விவசாய கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மத்திய, மாநில அரசின் தவறான பொருளாதார கொள்கையால், விவசாயிகள் பெற்ற கடனை செலுத்த முடியவில்லை. இதனை தள்ளுபடி செய்ய அனைத்து நடவடிக்கை எடுப்பேன் என அவர் தெரிவித்தார்.


திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜ் போட்டியிடுகிறர். இந்நிலையில், சேந்தமங்கலம் ஒன்றியப் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், சேந்தமங்கலம் ஒன்றிய பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக விளங்குகிறது. முற்றிலும் அனைத்து விவசாய கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மத்திய, மாநில அரசின் தவறான பொருளாதார கொள்கையால், விவசாயிகள் பெற்ற கடனை செலுத்த முடியவில்லை. இதனை தள்ளுபடி செய்ய அனைத்து நடவடிக்கை எடுப்பேன் என அவர் தெரிவித்தார்.பிரச்சாரத்தின் போது நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் காந்திசெல்வன், சேந்தமங்கலம் ஒன்றிய செயலாளர் அசோக்குமார் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் உடனிருந்தனர். இப்பிரச்சாரம் கல்குறிச்சி, பள்ளிப்பட்டி, பேளுக்குறிச்சி, மேலப்பட்டி, வெட்டுக்காடு, காளப்பநாயக்கன்பட்டி, துத்திகுளம், பெரியகுளம், சேந்தமங்கலம், நடுக்கோம்பை, வாழவந்தி கோம்பை, பொம்மசமுத்திரம், பொட்டணம், பச்சுடையம்பட்டி. அக்கியம்பட்டி, கொண்டமநாயக்கன்பட்டி, முத்துகாப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டர்.