tamilnadu

img

மாணவர்களை சுமைதூக்க வைத்த விவகாரம் பள்ளி முன்பு மாணவர், வாலிபர்கள் போராட்டம்

சென்னை, ஜூன் 3 - மாணவர்களை மூட்டை தூக்க வைத்த தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி திங்களன்று (ஜூன் 3) எம்ஜிஆர் நகர் சென்னை மேல்நிலைப் பள்ளி முன்பு போராட்டம் நடைபெற்றது. எம்ஜிஆர் நகர் சென்னை மேல்நிலைப் பள்ளியில் 10, 11 ஆம் வகுப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர் உள்பட 4 பேரை பள்ளிக்கு  சென்றுள்ளனர்.

பள்ளித் தலைமை ஆசிரியர் ராம தாஸ், 4 மாணவர்களையும் கட்டாயப்படுத்தி நுங்கம் பாக்கம் அழைத்து சென்று ள்ளார். 2 டன் புத்தகங்களை லாரியில் ஏற்றி வைத்து, பள்ளியில் கொண்டு வந்து இறக்கி வைக்க நிர்பந்தித்து உள்ளார்.

இது குறித்து கேள்வி எழுப்பிய பெற் றோர்களை அவமரியா தையாக பேசிய ராமதாஸ், மாணவர்களுக்கு சான்றிதழ் தர மறுத்துள்ளார். இதனை கண்டித்து பள்ளி முன்பு போராட்டம் நடத்த சென்ற இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கத்தை  சேர்ந்தவர்கள் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் வாக்கு வாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையும் மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

இந்த போராட்டத்தில் மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சமீர் அகமது, தென் சென்னை மாவட்டத் தலைவர் ச.ஆனந்தகுமார், செயலாளர் ரா.பாரதி, விருகை பகுதி ஒருங்கி ணைப்பாளர்கள் சதீஷ், மணி பாரதி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தீ.சந்துரு, பகுதி நிர்வாகி கள் மணிமாறன், கார்த்தி  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனை யறிந்த பள்ளிக்கு வந்த கல்வித்துறை அதிகாரி கலைச்செல்வியின் மாண வர் சங்கத் தலைவர்கள் மனு அளித்து பேசினர்.

;