tamilnadu

img

தமிழகத்தின் மின்தேவை 9 சதவீதம் அதிகரிப்பு..

சென்னை:
கொரோனா கட்டுப்பாட்டுக் குப் பிறகு முதல் முறையாக தமிழ்நாட்டில் அக்டோபர் மாதம் மின்தேவை அதிகரித்து உள்ளது.மின்சார தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் தொழிற்சாலைகள் உள்ளன. தமிழ்நாட்டில் வாகன தொழிற்சாலைகள், வாகன உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலைகள், எலெக்ட்ரானிக் உற்பத்தி தொழிலகங்களின் மையமாக தமிழ்நாடு உள்ளது.மத்திய மின்சார ஆணையத்தின் கணக்கெடுப்பின்படி, கடந்த ஆண்டு இதேகால கட்டத் தில் அகில இந்திய அளவில் மின்தேவை 98 ஆயிரத்து 363 மில்லியன் யூனிட்களாக இருந் தது. இந்த ஆண்டு 1 லட்சத்து 9 
ஆயிரத்து 630 மில்லியன் யூனிட் களாக அதிகரித்து இருக்கிறது. இது 11.5 சதவீதம் அதிகமாகும்.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அதிகபட்ச தேவை 14 ஆயிரத்து 335 மெகாவாட்டாக இருந்தது. இந்த ஆண்டு கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.தொழிற்சாலைகள், கடைகள், பள்ளிகள், திருமண மண்டபங் களை திறக்க தடைவிதிக்கப் பட்டது. தற்போது பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.கடந்த அக்டோபர் மாதம் தமிழகத்தின் அதிகபட்ச மின்தேவை 14 ஆயிரத்து 323 மெகாவாட்டாக உள்ளது.கொரோனா கட்டுப்பாடு முழுமையாக இருந்தபோது தமிழ் நாட்டின் மின்தேவை ஏப்ரல் மாதத்தில் 25.6 சதவீதமும், மே மாதத்தில் 14.5 சதவீதமும் குறைந் தது. செப்டம்பர் வரை மின் தேவை குறைவாகவே இருந்தது. செப்டம்பர் வரை மத்திய அரசு 4 தளர்வுகளை அறிவித்தது.இதன்பிறகு தொழிற்சாலைகள் முழுமையாக செயல்பட தொடங்கின. வணிக வளாகங் கள் போன்றவை திறக்கப்பட்டன. இதனால் மின்தேவை அதிகரித்தது.உணவகங்கள் கடைகள் திறக்கும் நேரம் அதிகரிக்கப் பட்டது. இதனால் மின்சார தேவை அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழகத்தின் மின்சார தேவை 8 ஆயிரத்து 266 மில்லியன் யூனிட்டாக இருந்தது.இந்த ஆண்டு அக்டோபர் மாதம் மின்சார தேவை 9 ஆயிரத்து 86 மில்லியன் யூனிட்டாக அதிகரித்து இருக்கிறது. இது 9 சதவீதம் அதிகமாகும். கொரோனா கட்டுப்பாட்டுக்குப் பிறகு முதல் முறையாக தமிழ்நாட்டில் அக்டோபர் மாதம் மின்தேவை அதிகரித்து இருப்பது குறிப் பிடத்தக்கதாகும்.