சென்னை, ஜன.18-
2024ஆம் ஆண்டின் முதல் இரண்டு வாரங்களே முடிந்துள்ள நிலையில், 7,785 ஊழியர்களை ‘டெக் நிறுவனங்கள்’ வேலையை விட்டு அனுப்பியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
பல பணியாளர்களின் வேலை யை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மாற்றி வரும் சூழல், குறைந்து வரும் தொழில் நுட்ப சேவைகளுக்கான தேவை, பணியாளர்களின் திறன் வளர்த்தல் குறைபாடு, உலகளாவிய பொரு ளாதார மந்த நிலை உள்ளிட்ட பல காரணங்களால் ‘லே ஆஃப்’ எனப் படும் ‘வேலை பறிப்பு’ நடப்பதாக காரணம் கூறப்படுகிறது. இதுகுறித்து அண்மையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனர்களில் ஒருவரும், தொழிலதிபருமான பில் கேட்ஸ், ஒவ்வொரு புதிய தொழில்நுட்பம் வரும்போதும் மக்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த அச்சம் வருகிறது.
ஆனால் புதிய தொழில்நுட்பத்தால் வேலை வாய்ப்புகள் பறிபோகும் என்பது உண்மை கிடையாது எனத் தெரி வித்தார். ஆனால் உண்மை வேறு விதமாக உள்ளது. ஆனால், கடந்த 2023ஆம் ஆண் டில் கூகுள் நிறுவனம் அதன் உலக ளாவிய பணியாளர்களில் 12,000 பேரை, அதாவது 6 சதம் பேரை வேலையை விட்டு அனுப்பும் முடிவை எடுத்தது. இந்த பணிநீக்க நடைமுறைகள் நிறுவனத்திற்கு அத்தியாவசியமானது என்று அதன் சிஇஓ சுந்தர் பிச்சை விளக்கியிருந் தார். இந்நிலையில், பெரும் தொழில் நுட்ப நிறுவனங்கள், இந்தாண்டு ஜனவரியின் முதல் இரண்டு வாரங்களில் மட்டும் ஆயிரக்கணக் கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன.
ஜனவரி மாதத்தின் முதல் பாதியில் மட்டும் இதுவரை 7,785 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளன. நிறுவனங்களின் பணி நீக்க நடவடிக்கைகளை ஆரா யும் Layoffs.fyi என்ற கண்கா ணிப்பு இணையதளத்தின் தரவு களின்படி, இந்த கூற்றுகள் கிடைத் துள்ளன. அமேசான் நிறுவனம் கடந்த வாரம் தனது ஸ்ட்ரீமிங் மற்றும் ஸ்டுடியோ செயல்பாடுகளில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய் தது. அமேசான் மற்றும் கூகுள் இரண்டும் செயற்கை நுண்ணறிவு பந்தயத்தில் மைக்ரோசாப்ட் நிறு வனத்துடன் நேரடியாகப் போட்டி யிடுகின்றன.
இந்த போட்டியில், செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்திடம் பணியை ஒப்படைத்து விட்டு, ஆயிரக்கணக்கான ஊழியர் களை பணிநீக்கம் செய்தும் வரு கின்றன. இதனால் புதிய வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது மட்டுமல்ல; ஏற்கெனவே பணியில் உள்ள ஐ.டி. ஊழியர்கள் அதிர்ச்சி யில் ஆழ்ந்துள்ளனர். (ந.நி)