tamilnadu

img

மிடுகரப்பள்ளியில் வாலிபர் சங்கத்தின் 37வது பகத்சிங் நினைவு கபடி போட்டி

மிடுகரப்பள்ளியில் வாலிபர் சங்கத்தின் 37வது பகத்சிங் நினைவு கபடி போட்டி

கிருஷ்ணகிரி, ஆக.16- ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட மிடுகரப்பள்ளி யில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 37ஆம் ஆண்டு பகத்சிங் நினைவு கபடி போட்டி நடைபெற்றது. வாலிபர் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் ரவி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் மிடுகரப்பள்ளி அரசு துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் சரஸ்வதி தேசியக் கொடியை ஏற்றினார். சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் மாதர் சங்க மாநகர தலைவர் வள்ளி தலைமையில் செயலாளர் சுகாமணி முன்னிலையில் துவங்கியது.  விளையாட்டுப் போட்டியை சிபிஎம் ஒன்றிய செயலாளர் ஆர்.கே.தேவராஜ், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர், விவ சாயிகள் சங்க மாவட்டப் பொருளாளர் எம்எம்.ராஜு, கட்டுமான சங்க மாவட்டத் தலைவர் சீனிவாசன் ஆகியோர் கூட்டாக துவக்கி வைத்தனர்.கபடி போட்டிகளை அதிமுக தெற்கு பகுதிச் செயலாளர் வாசு தேவன், அதிமுக நிர்வாகி கே.டி.ஆர்.திம்ம ராஜ், திமுக 37வது வார்டு மாநகர மன்ற உறுப்பினர் சென்னீரப்பா, திமுக 40வது வார்டு மாநகர மன்ற உறுப்பினர் மஞ்சுளா மணிராஜ் துவக்கி வைத்தனர். பரிசுகள் வழங்கும் விழாவிற்கு சிபிஎம் ஓசூர் மாநகர செயலாளர் எம் ஜி நாகேஷ்பாபு தலைமை தாங்கினார். முதல் பரிசு பெற்ற எஸ்.பி.கே.சி குழுவிற்கு வம்சி எம்.ஜி.வசந்த்குமார் 30 ஆயிரம் ரூபாயையும் இரண்டாம் பரிசு பெற்ற என்.ஆர்.பாய்ஸ் குழுவிற்கு பாரதி ரூ. 20 ஆயிரத்தையும், மூன்றாம் பரிசு பெற்ற பிரபாகரன் மெமோரியல் குழுவிற்கு ஜி.எம்.முருகேஷ், ரூ.10 ஆயிரத்தையும் நான்காம் பரிசு பெற்ற ராகவேந்திரா குழுவிற்கு டி.ராமகிருஷ்ணன் ரூ.5 ஆயிரம் பரிசுத் தொகைகளையும் வழங்கினர். வெற்றி பெற்ற கபடி குழுக்களுக்கு சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.பத்ரி, மாவட்டச் செயலாளர் சி.சுரேஷ், விவசாயிகள் சங்க மூத்த தலைவர் நாகராஜ்ரெட்டி, சிஐ டியு மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர், சிபிஎம் செயற்குழு உறுப்பினர் மகாலிங்கம், ஒன்றியக் குழு சந்திரசேகர், விவசாயிகள் சங்க வட்டச் செயலாளர் முனிராஜ் ஆகியோர் பாராட்டி  வெற்றிக் கோப்பைகளை வழங்கினர். சிபிஎம் கிளைச் செயலாளர் உதை பாரதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வாலிபர் சங்க மாநகர செயலாளர் ஹரி நந்தா, தலைவர் திலக், ஒன்றிய செயலாளர் சங்கர், தலைவர் சேகர்  ஆகியோர் கலந்து கொண்டனர். சிறுவர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. என்.முரளி நன்றி கூறினார்.