tamilnadu

மோடி- எடப்பாடி கூட்டணியை தமிழகம் வெறுக்க 25 காரணங்கள்!

பொங்கல் பண்டிகை விடுமுறை தடை செய்ய முயற்சி

காவேரி பிரச்சனையில் துரோகம்

மேகதாது அணை கட்ட கர்நாடகத்திற்கு அனுமதி

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு

தமிழக துறைமுகங்கள் உட்பட அனைத்து துறைமுகங்களையும் பெரு     நிறுவனங்களுக்கு தாரைவார்க்கும் சாகர்மாலா திட்டம்

டெல்டாவை அழித்து ஹைட்ரோ கார்பன் மண்டலமாக மாற்ற     திட்டம்

8 வழி பசுமை சாலை உயர்நீதி மன்ற தீர்ப்பை அங்கீகரிக்க மறுப்பு

கெயில் குழாய்களை விளை நிலங்கள் வழியாக கொண்டு செல்ல   முயற்சி

மின் கோபுரங்கள் விளை நிலங்களில் அமைக்க முயற்சி

நீட் தேர்வின் மூலம் தமிழக மாணவர்களின் கனவுகளை அழித்தது

தபால் துறை/ இரயில்வே/ வருமான வரி துறை போன்ற  பிரிவுகளில் வட இந்தியாவில் தேர்வுகளில் முறைகேடுகள் மூலம்     தமிழக இளைஞர்கள் வேலை வாய்ப்பு பறிப்பு

ஓக்கி மற்றும் கஜா புயல் போதுமான நிவாரணம் வழங்க மறுப்பு;  கஜா புயல் பாதிப்பை பார்க்கவோ ஆறுதல் சொல்லவோ வர மறுத்த  பிரதமர்

பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. காரணமாக கோவை/ திருப்பூர்   /ஈரோடு மற்றும் பல நகரங்களில் சிறு தொழில்கள் மற்றும் சிறு வணிகம் கடும் பாதிப்பு.

பி.எச்.இ.எல்/ துப்பாக்கி தொழிற்சாலை/ ஆவடி இராணுவ தளவாட தொழிற்சாலைகள் உட்பட பொதுத்துறை நிறுவனங்களுக்கு போதிய  ஆர்டர்கள் வழங்காமல் சீரழிப்பது

ஜல்லிக்கட்டிற்காக போராடுபவர்கள் பொறுக்கிகள் (சுப்பிரமணிய சாமி) நெடுவாசலில் போராடுபவர்கள் தேச துரோகிகள்(எச்.ராஜா) 

தமிழர்கள் கருப்பர்கள் உயர்ந்த இனத்தை சேர்ந்த நாங்கள் அவர்களுடன் சேர்ந்து வாழ்கிறோம் (தருண் விஜய்) என தமிழக  மக்களை பா.ஜ.க. தலைவர்கள் ஏசியது.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை இராணுவத்தின் தாக்குதல்களை   தடுக்க தவறியது

தமிழகத்திற்கு ரேஷன் பொருட்கள் வெட்டு.

சங்பரிவார விஷமிகளால் தந்தை பெரியார் சிலைகள் உடைப்பு;  அம்பேத்கர் சிலைகள் அவமரியாதை!

மத ஒற்றுமைக்காக வழங்கப்பட்ட கோட்டை அமீர் விருதை  நிறுத்தியது.

தில்லியில் மாதக்கணக்கில் போராடிய தமிழக விவசாயிகளை சந்திப்பதற்கு கூட மறுத்த பிரதமர்.

தமிழ் மொழியை சிறுமைப்படுத்தி இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை  திணிக்க முயற்சி

தமிழக இரயில்களுக்கு அந்தோத்யா, தேஜஸ் என வட மொழி  பெயர்கள் சூட்டுதல்

கீழடி மற்றும் ஆதிச்ச நல்லூர் அகழ்வாய்வு பணிகளை தடுக்க முயற்சி

தமிழகத்தின் தனித்துவ பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை சிதைக்கு முயல்வது.

தமிழை ஆட்சி மொழியாக அங்கீகரிக்க மறுப்பது.

இப்படி பல காரணங்களை பட்டியலிடலாம். வேலையின்மை, விலைவாசி உயர்வு, கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகள், மத வெறி தாக்குதல்கள் போன்ற இந்தியா முழுவதும் உள்ள பிரச்சனைகளுடன் மேற்கண்ட தமிழகத்திற்கு செய்த துரோகங்களும் நினைவில் கொள்வது அவசியம் ஆகும். தமிழக நலன் காக்க மோடி- எடப்பாடி அரசாங்கங்களை தூக்கி எறிவது காலத்தின் கட்டாயம்!


அ.அன்வர் உசேன்

;