tamilnadu

22 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 இளைஞர்கள் கைது

  22  கிலோ  கஞ்சா பறிமுதல்:  3  இளைஞர்கள்  கைது

அம்பத்தூர், செப். 21-  அம்பத்தூரில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த 3  இளைஞர்களை காவல் துறையினர் சனிக்கிழ மையன்று கைது செய்தனர். அம்பத்தூர் பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக மதுவிலக்கு அமலாக்கப் காவல் துறையின ருக்கு ரகசியத் தகவல் சனிக்கிழமை கிடைத்தது. இதையடுத்து அங்கு சந்தேகத்திற்கு இடமாக கையில் பையுடன் வந்த 3 இளைஞர்களை  மடக்கி காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அவர்கள் கொண்டு வந்த  பைகளை சோதனை செய்தபோது, அதில் 22  கிலோ எடையுள்ள கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சிப் தேபர்பர்மா (42), சோயல் ராணா (22), பிரசாந்த தாஸ்(19) என்பதும்,  அவர்கள் அங்குள்ள கஞ்சன் ஜங்கா பகுதியில் இருந்து ரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து கொரட்டூர், அம்பத்தூர், தொழிற் பேட்டை பகுதிகளில் விற்பனை செய்ததும் தெரியவந்தது.