tamilnadu

img

சென்னை மெரினாவில் 900 கடைகளுக்கு 12 ஆயிரம் பேர் விண்ணப்பம்....

சென்னை:
மெரினாவில் 900 கடைகள் வைக்க மட்டுமே மாநகராட்சி அனுமதி அளித்துள்ள நிலையில் 12 ஆயிரம்  பேர் கடைகள் வைக்க விண்ணப்பித்துள்ளனர்.கொரோனா தொற்று பரவல் காரணமாக மெரினா கடற்கரை 8 மாதமாக மூடப்பட்டு இருந்தது. பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. அங்கு செயல்பட்ட அனைத்து கடை வியாபாரிகளும் வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில் கடந்த 14 ஆம் தேதி முதல் மெரினா கடற்கரைக்கு பொது மக்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து மெரினாவில் ஏற்கனவே கடை வைத்து இருந்தவர்களும், புதிதாக கடை வைக்கவும் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி 900 கடைகள் மெரினாவில் வைக்க அனுமதி அளிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து, கடைகள் வைப்பதற்கு விண்ணப்பங்கள் வழங்கி வருகிறது. மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் வரிசையில் நின்று படிவங் களை பெற்று செல்கின்றனர். இதுவரையில் 12 ஆயிரம் பேர் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.பெறப்பட்ட 12 ஆயிரம் விண்ணப்பங்களில் 10 ஆயிரம் பேர் புதிதாக கடை வைப்பதற்கு விண்ணப்பம் கொடுத்துள்ளனர். மீதமுள்ள 2,000 பேர்ஏற்கனவே கடை வைத்திருந்தவர்கள் ஆவர். ஏற்கனவே கடை வைத்திருந்தவர்களிடம் இருந்து அதிகவிண்ணப்பங்கள் வந்திருந்தாலும் கூடுதலாக கடைகள் ஒதுக்குவதற்கு வாய்ப்பு இல்லை.

ஆக 900 பேருக்கு மட்டுமே கடை வைக்க மாநகராட்சி அனுமதி அளிக்கிறது. அவர்களுக்கு தள்ளு வண்டிகள் வழங்கப்படும். மார்ச் மாதத்தில் வியாபாரிகளுக்கு வண்டிகள் வழங்கப்படும். முதல் கட்டமாக 300 வண்டிகள் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.மெரினாவில் வைக்கப்படும் கடைகளில் புத்தகம்,காலணிகள், துணிமணிகள், எலக்ட்ரானிக்பொருட்கள், செல்போன் போன்றவை விற்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.குளிர்பானங்கள், பேன்சி பொருட்கள், உணவு பொருட்கள், நொறுக்குத் தீனிகள் போன்றவை மட்டுமே விற்க அனுமதிக்கப்படுகிறது. விண்ணப் பிக்க டிசம்பர் 26 ஆம் தேதி கடைசிநாளாகும். அதன் பின்னர் பெறப்பட்ட மொத்த விண்ணப் பங்களையும் ஆய்வு செய்து ஜனவரி முதல் வாரத்தில் இறுதி செய்யப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

;