வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை ரூ.101 உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த மாதம் வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. தற்போது வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலையை பொதுத்துறை நிறுவனங்கள் ரூபாய் 101 உயர்த்தி உயர்த்தியுள்ளது. இதனால் சிலிண்டர் விலை ரூ.2234 ஆக விற்பனை செய்யப்படுகிறது. எனவே 19 கிலோ எடையுடைய வணிக பயன்பாடு சமையல் சிலிண்டர் கடந்த ஓராண்டில் மட்டும் 770 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து சென்னையில் 19 கிலோ எடையுடைய சிலிண்டர் விலை 101.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஹோட்டல்களில் உணவு பொருட்களின் விலை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.