tamilnadu

img

நாளிதழுக்கு விளம்பரம் பெறுவதில் சூரத் பாஜக தலைவர் மோசடி... கையும் களவுமாக சிக்கியதால் தற்கொலை முயற்சி

சூரத்:
நாளிதழ்களுக்கு அரசு விளம்பரம் பெற்றுத் தருவதில் நடந்த மோசடி விவகாரத்தில் பாஜக தலைவர் சிக்கினார்.குஜராத் மாநிலம் சூரத்நகர பாஜக துணைத்தலைவராக இருப்பவர் பி.வி.எஸ்.சர்மா (57). 1990 முதல் 18 ஆண் டுகள் வருமானத்துறை அதிகாரியாக இருந்த இவர், 2007வரை விருப்ப ஓய்வுபெற்றார். அதைத் தொடர்ந்து பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு அணியில் இணைந் தார். பாஜகவில் தனக்குள்ளசெல்வாக்கைப் பயன் படுத்தி, சூரத்தில் உள்ள பலநிறுவனங்களின் இயக்குநர் குழுவிலும் (நிதி மற்றும் வரிவிதிப்பு) பணியாற்றி வருமானம் ஈட்டி வந்தார்.

இந்நிலையிலேயே, மோசடி மற்றும் பித்தலாட்ட குற்றத்தில் ஈடுபட்டதாக அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.அதாவது, இரண்டு செய் தித்தாள் நிறுவனங்களுக்கு, அரசு (DAVP) மற்றும் தனியார் விளம்பரங்களைப் பெறுவதற்காக, அந்த செய்தித் தாள்கள் அதிகளவில் விற்பனையாகின்றன என்று பொய் யான ஆவணங்களைப் பயன்படுத்தியதை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்துள் ளனர்.பணமதிப்பு நீக்கத்தின் போது, முறைகேட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டிலும் கடந்தமாதம் சர்மா சிக்கியிருந்தார்.இதனால், நெருக்கடிமுற்றுவதை அறிந்த சர்மா, கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்ட சர்மா, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தனது நண்பரின் வீட்டில் நள்ளிரவில் தூக்குப் போட்டு தற்கொலை நடவடிக்கையில் இறங்கினார். எனினும் நல்வாய்ப் பாக அவர் காப்பாற்றப்பட்டு உள்ளார்.

;