வியாழன், மார்ச் 4, 2021

tamilnadu

சிவகங்கை ஆட்சியரிடம் சிபிஎம் கோரிக்கை மனு

சிவகங்கை, மே 23- சிவகங்கை மாவட்டத்தில் எட்டு மாதங்களாக ஓய்வூதி யம் கிடைக்காமல் ஐந்தாயிரம்  அமைப்புசாரா தொழிலா ளர்கள் தவித்து வருகின்றனர் அவர்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்கவேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின்மாவட்ட செயலாளர் வீரபாண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். மனுவில்,  “60 வயது நிரம்பிய ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஓய்வூதி யம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இத்தொழி லாளர்களுக்கு எட்டு மாதங்களாக ஓய்வூதியம் வழங்க வில்லை.  ஊரடங்கால் அவர்கள் உணவிற்கே சிரமப்பட்டு வருகின்றனர். கொரோனா ஊரடங்கால் அமைப்பு சாரா தொழி லாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரண உதவியும் பல ருக்கு வழங்கப்படவில்லை. ஆட்சியர் உடனடியாக நட வடிக்கை எடுத்து கொரோனா கால நிவாரணம், எட்டு மாத ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென” தெரிவித்துள்ளார்.

;