பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிக்கு பேருந்து வசதி கோரி வாலிபர் சங்கம் மனு
பொள்ளாச்சி, செப். 9- ஆனைமலை தாலுகாவிற்கு உட்பட்ட அங்காலக்குறிச்சியில் உள்ள ஜே.ஜே. நகர் குடியிருப்பில் வசிக்கும் பழங்குடியின மற்றும் பட்டியலின மக்கள், தங்களுக்கு பேருந்து வசதி செய்து தரக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தினர் பொள்ளாச்சி சார் ஆட்சி யர் அலுவலகத்தில் செவ்வாயன்று மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதா வது: ஜே.ஜே. நகர் குடியிருப்பில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு பேருந்து நிறுத்தம் இருந்தும், பேருந்து வசதி இல்லாததால் பள்ளி குழந்தைகள், மாணவர்கள், பெண்கள் என அனைவரும் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். குறிப் பாக, காலை மற்றும் மாலை பள்ளி நேரங்களில் பேருந்து இல்லாத தால், மாணவர்கள் ஒரு கிலோ மீட் டர் தூரம் வரை நடந்து செல்ல வேண் டிய நிலை உள்ளது. இதன் காரண மாக மாணவர்களின் பள்ளி வருகை பாதிக்கப்பட்டு, இடைநிற்றல் அதி கரிக்கிறது. தனியார் ஆட்டோக்களில் பள்ளிக்கு செல்ல ஒரு குழந்தைக்கு மாதத்திற்கு ரூ.1500 வரை செல வாகும் நிலையில், கூலி வேலைக்கு செல்லும் பெற்றோர்களுக்கு இது பெரும் சுமையாக உள்ளது. இத னால், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் சிரமம் ஏற் படுவதோடு, பெற்றோர்கள் மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர். பொள்ளாச்சி-வால்பாறை மெயின் சாலையில் இப்பகுதி அமைந்திருந்தும் பேருந்து வசதி இல்லை. எனவே, சார் ஆட்சியர் தலையிட்டு, மாணவர்களின் கல்வி நலனை காக்க காலை மற்றும் மாலை நேரங்களில் அரசு பேருந்து வசதியை உறுதிப்படுத்த வேண் டும் என்று மனுவில் குறிப்பிடப்பட் டுள்ளது. முன்னதாக, அரசு போக்குவ ரத்து கழக பொள்ளாச்சி பணிமனை 2-ன் பொது மேலாளரிடம் இதே கோரிக்கை அடங்கிய மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனு கொடுக்கும் இயக் கத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம். தினேஷ் ராஜா, மாவட்டப் பொருளாளர் ஆர். அர்ஜுன், முன் னாள் துணைத் தலைவர் மூ. அன்பர சன், விதொச மாவட்டப் பொருளா ளர் கே. மகாலிங்கம், வாலிபர் சங்க ஜே.ஜே. நகர் கிளைச் செயலாளர் யோகேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.