வளர்ச்சியின் வாசலில் மஞ்சள் மாநகரம்
மஞ்சள் சாகுபடிக்கும், ஜவுளி உற்பத்திக்கும் நாட்டின் வரைபடத்தில் தனக்கென தனி இடத்தை பதித்து வைத் திருக்கிறது ஈரோடு மாவட்டம். ‘மஞ்சள் மாநகரம்’ என்றும் ‘ஜவுளி நகரம்’ என்றும் பெருமையுடன் அழைக்கப்படும் ஈரோடு, தனது பாரம்பரிய தொழில்களின் மூலம் மாநிலத் தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு வலிமையான அடித்தள மாகத் திகழ்கிறது. கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவுத் தொழிலில் ஈரோடு மாவட்டத்தின் பங்கு மகத்தானது. துண்டுகள், படுக்கை விரிப்புகள், லுங்கிகள், ஆயத்த ஆடைகள் எனப் பல வகையான ஜவுளிப் பொருட்கள் இங்கிருந்து உள் நாட்டிற்கும், உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படு கின்றன. ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய பகுதிகள் இணைந்து ‘இந்தியாவின் ஜவுளி பள்ளத்தாக்கு’ என்றும் அழைக்கப்படுகிறது. டெக்ஸ்வெலி போன்ற மிகப்பெரிய ஜவுளி வர்த்தக மையங்கள் உருவாகியிருப்பது, இந்தத் துறையின் எதிர்கால வளர்ச்சிக்கு வலு சேர்க்கிறது. ஈரோடு மாவட்டம் தனது இரட்டைத் தொழில்களின் மூலம் நிலையான பொருளாதார வளர்ச்சி அடுத்தகட்டத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. இதன்படி, மஞ்சளைப் பொடியாக விற்பதோடு நிறுத்தாமல், அதன் உபயோகத்தைக் கூட்டும் தயாரிப்புகளான மஞ்சள் எண்ணெய் (Oleoresin), மஞ் சள் சார்ந்த அழகு சாதனப் பொருட்கள், மருந்துகள், மற்றும் இயற்கை சாயங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்வதற் கான தொழிற்சாலைகளை ஊக்குவிக்க வேண்டும். மஞ்சள் சாகுபடி மற்றும் பதப்படுத்துதலில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளவும், அதிக மகசூல் தரும் புதிய இரகங் களைக் கண்டறியவும், அரசு அறிவித்தபடி மஞ்சள் ஆராய்ச்சி மையத்தை விரைந்து அமைத்து, செயல் பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். இதேபோல, போட்டி நிறைந்த உலகச் சந்தையில் ஈடு கொடுக்க, விசைத்தறி மற்றும் கைத்தறி அலகுகள் நவீன இயந்திரங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பங்களை பயன்படுத்த நிதி உதவி மற்றும் சலுகை களை அரசு வழங்க வேண்டும். இளைஞர்கள் இந்தத் தொழிலில் ஈடுபட ஊக்கமளிக்கும் வகையில், நவீன ஆடை வடிவமைப்பு, சந்தைப்படுத்துதல், மற்றும் புதிய தொழில் நுட்பங்கள் குறித்துப் பயிற்சி அளிக்கும் திறன் மேம் பாட்டுப் பயிற்சி மையங்களை உருவாக்க வேண்டும். பன் னாட்டு வர்த்தக நிறுவனங்களுடன் நேரடித் தொடர்பை ஏற்ப டுத்தி, ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில், பிரத்தியேக ஏற்றுமதி மையத்தை அமைப்பது மாவட்டத்திற்கு ஒரு பெரிய உந்துதலாக இருக்கும். இத்தகைய முயற்சியில் அனைவரும் கைகோர்த்தால், ஈரோடு மாவட்டம் நாட்டின் பொருளாதாரத்தில் மேலும் ஒரு முக்கிய முத்திரையைப் பதித்து, வளர்ச்சியை நோக்கிய புதிய மைல்கல்லை அடை யும் என்பது நிதர்சனம்.
