தனியார்மயத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்!
மின் ஊழியர் சங்க பொதுச்செயலாளர் எஸ்.ராஜேந்திரன் அழைப்பு
தருமபுரி, ஆக.6- தனியார்மயத்திற்கு எதிராக தொழிலாளர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.ராஜேந்தி ரன் அழைப்பு விடுத்துள்ளார். சிஐடியு தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக ஊழியர் சம்மேளனத் தின் 16 ஆவது மாநில மாநாடு, தரும புரியில் நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் தமிழ்நாடு மின் ஊழி யர் மத்திய அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.ராஜேந்தி ரன் வாழ்த்திப் பேசுகையில், தற் போது ஓய்வுபெறும் தொழிலாளர் களுக்கு பணப்பயன்களை அரசு தருவதில்லை. கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்தால் இழப்பீடு தருகிறது. மின்வாரிய தொழிலா ளர்கள் விபத்தில் இறந்தால் இழப் பீடு தருவதில்லை. டாஸ்மாக் மூலம் அரசுக்கு ரூ.52 ஆயிரம் கோடி வரு மானம் வருகிறது. ஆனால், அதன் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை. தமிழ்நாட்டிற்கு ஒரு நாளைக்கு 20 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் தேவைப்படுகிறது. தற்போது அரசு மின்சார பேருந்து இயக்கப்படுகிறது. மின்சார பற்றாக் குறையை எப்படி சமாளிக்க போகி றது இந்த அரசு? மின்சார பேருந் தில் ஒப்பந்த ஊழியர்களை நியமிக் கின்றனர். மக்களுக்கு சேவை செய் யும் பொதுத்துறையை பாதுகாப்ப தற்கு பதிலாக எப்படி தனியார்மயம் செய்வது என்று யோசிக்கின்றனர். பொதுத்துறை நிறுவனங்களின் ரூ.10 லட்சம் கோடி சொத்துகளை தனியாருக்கு விற்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. பொதுத் துறை வங்கிகள் திவாலாகிவிட்ட தாக சொல்கின்றனர். சாதாரண மக் களுக்கு கடன் வழங்குவதில்லை; பெரும் முதலாளிகளுக்கு பணத்தை கொடுத்துவிட்டு, வாங்கிய பணத்தை கட்டாமல் ஏமாற்றுகின்றனர். இவர் களுக்கு ஆதரவாக ஒன்றிய அரசு, கடனை தள்ளுபடி செய்கிறது. மின் துறையை 5 ஆக பிரித்து தனியாரி டம் கொடுக்க முயற்சிக்கின்றனர். ஸ்மார்ட் மீட்டர் திட்டம் மூலம் நேரத் திற்கேற்ப மின்கட்டணத்தை உயர்த்துகின்றனர். எல்லாத்துறை களிலும் தனியார்மயத்தை ஊக்கு விக்கின்றனர். பொதுத்துறை நிறுவ னங்களை பாதுகாக்க அனைத்து தொழிலாளர்களும் ஒன்று திரண்டு போராட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.