குழாயை சரிசெய்யாததால் குடிநீர் விநியோகம் பாதிப்பு கிராம சபையில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்
தருமபுரி, அக்.12- சேதமடைந்த குழாயை சரிசெய்யா ததால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட் டுள்ளதாகக்கூறி, கிராமசபைக் கூட்டத் திற்கு பொதுமக்கள் காலிக்குடங்களு டன் வந்து, வட்டார வளர்ச்சி அலுவ லரை சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற் பட்டது. தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், நார்த்தம்பட்டி ஊராட்சியில் சனி யன்று நடைபெற்ற கிராம சபைக் கூட் டத்திற்கு ஊராட்சி செயலர் ரமேஷ் தலைமை வகித்தார். குடிநீர் பிரச் சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தக் கோரி காலிக்குடங்களை கூட்டத்தில் வைத்துவிட்டு பொதுமக்கள் வெளி நடப்பு செய்தனர். இதன்பின் கூட்டத்தில் பங்கேற்க வந்த நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் நீலமேகம், பொது மக்களை கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்புவிடுத்து, அவர்களது குறைகளைக் கேட்டறிந் தார். அப்போது, காலிக்குடங்களும் துக்க நிகழ்வையும் இணைத்து பேசிய தால் அதிருப்தியடைந்த பொதுமக்கள் அவரை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த அதியமான் கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் லதா தலைமையிலான போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வட்டார வளர்ச்சி அலுவலரை மீட்டனர். இதுகுறித்து அப்பகுதி பொது மக்கள் கூறுகையில், நார்த்தம்பட்டி ஊராட்சியில் நார்த்தம்பட்டி, பாரதி யார் நகர், காந்தி நகர், சென்னியம்பட்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங் கள் உள்ளன. 60 ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் வசித்து வருகின்றனர். குடி யிருப்பு பகுதி மக்களுக்கு ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிலையில், நல்லம் பள்ளி - இலளிகம் இடையே விரிவுப டுத்தப்பட்ட புதிய தார்சாலை அமைக் கும் பணியின்போது, குடிநீர் குழாய்கள் சேதமடைந்தன. இதனால் குடிநீர் விநி யோகம் பாதிக்கப்பட்டது. குழாய்கள் சேதமடைந்து 7 மாதங்களாகியும் இது வரை குழாயை சரிபடுத்தி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
ரோலக்ஸை பிடிக்க களத்தில் இறங்கிய சின்னத் தம்பி!
கோவை, அக்.12- ‘ரோலக்ஸ்’ என்ற யானையை பிடிக்க வந்த இரண்டு கும்கி யானைகளுக்கு மதம் பிடித்ததால், சின்னத்தம்பி என்ற கும்கி யானை தற்பொழுது கொண்டு வரப்பட்டுள் ளது. கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளையொட்டி அமைந்துள்ள வனப்பகுதிகளில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்த யானைகள் உணவு, குடிநீர் தேடி வனப்பகுதியிலிருந்து வெளியேறி கிரா மங்களுக்குள் நுழைவது தொடர் கதையாக உள்ளது. போளுவாம்பட்டி வனச்சரகத்திற் குட்பட்ட பகுதிகளில் யானைகளால் பயிர் சேதங்கள் அதிகளவில் ஏற்பட்டு வருகின்றன. தொண்டாமுத்தூர், நரசீபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் ‘ரோலக்ஸ்’ என்று அப்பகுதி மக்களால் அழைக்கப்படும் ஒற்றை ஆண் யானை தொடர்ச்சியாக கிராமங்களுக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வரு கின்றது. இதனால் அந்த யானையை இடமாற் றம் செய்வது தொடர்பாக கோவை மாவட்ட வனத்துறையினர் உயரதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பினர். அனுமதி கிடைத் ததையடுத்து, அந்த யானையை பிடிப்பதற் கான பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ரோலக்ஸ் யானை யை கண்காணித்து பிடிப்பதற்காக ஆனை மலை புலிகள் காப்பகம் டாப்ஸ்லிப்பில் இருந்து கொண்டு வரப்பட்ட கபில்தேவ், நரசிம்மன் மற்றும் முத்து ஆகிய மூன்று யானைகள் கொண்டு வரப்பட்டன.அதில் நர சிம்மன், முத்து ஆகிய இரண்டு யானைக ளுக்கும் மதம் பிடித்ததால், கடந்த 10 ஆம் தேதியன்று டாப்சிலிப்பிற்கு திருப்பி அனுப் பப்பட்டது. அதற்கு பதிலாக அங்கிருந்து சின்னத்தம்பி என்ற கும்கி யானை தற்பொழுது கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆசிரியர் நேரடி நியமனத்தேர்வு: நீலகிரியில் 1476 பேர் பங்கேற்பு
உதகை, அக்.12- ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப் பட்ட நேரடி நியமனத்தேர்வில் நீலகிரி மாவட் டத்தில் 1486 தேர்வர்கள் பங்கேற்றனர். நீலகிரி மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடைப்பெற்ற முதுகலை ஆசிரி யர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1 மற் றும் கணினி பயிற்றுநர் நிலை- 1 ஆகிய பணி யிடங்களுக்கான நேரடி நியமனத்தேர்வு ஞாயிறன்று நடைபெற்றது. உதகை பெத் லேகம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிஎஸ்ஐ சிஎம்எம் பள்ளி, நிர்மலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ரெக்ஸ் பள்ளி, சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் புனித சூசையப்பர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய 6 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. உதகை நிர்மலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா ஆய்வு செய்தார். முதன்மைக்கல்வி அலுவலர் நந்த குமார், உதகை வட்டாட்சியர் சங்கர்கணேஷ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். இத் தேர்வுக்கு 1596 தேர்வர்கள் விண்ணப் பித்திருந்த நிலையில், 1476 தேர்வர்கள் பங் கேற்றனர். 120 தேர்வர்கள் கலந்து கொள்ள வில்லை.