வல்வில் ஓரி விழா: ரூ.2.67 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
நாமக்கல், ஆக.3- கொல்லிமலையில் 2 நாட்கள் நடைபெற்ற வல்வில் ஓரி விழாவின் நிறைவு நாளான ஞாயிறன்று, 190 பயனாளிகளுக்கு ரூ.2.67 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவி கள் வழங்கப்பட்டது. கொல்லிமலையை ஆண்ட கடையேழு வள்ளல்களுள் ஒருவ ரான வல்வில் ஓரியின் புகழைப் போற்றும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் ஆடிப்பதினேழு, ஆடிப்பதினெட்டு (ஆக.2,3) ஆகிய தேதிகளில் வல்வில் ஓரி விழா நடை பெற்றது. இதன் நிறைவுநாளான ஞாயிறன்று, மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி, சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கு.பொன்னு சாமி ஆகியோர் முன்னிலையில் வல்வில் ஓரியின் திருவுருவப் படத் திற்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தப்பட்டது. இதை யடுத்து 190 பயனாளிகளுக்கு ரூ.2.67 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும், வில்வித்தை போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள், கலைநிகழ்ச்சிகள் நடத்திய கலைகுழுவினர் மற்றும் மாணவ, மாணவியர்கள் ஆகியோ ருக்கு சான்றிதழ் மற்றும் கேடயங் களை ஆட்சியர் வழங்கினார். இதன்பின் அவர் பேசுகையில், வல்வில் ஓரியின் திறமை, அவர் ஆட்சி செய்த யுக்தி ஆகியவற்றை யும், மேலும் நமது கலாச்சாரம், பண் பாடு ஆகியவற்றை அடுத்த தலை முறைகளுக்கு எடுத்து செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு வல்வில் ஓரி விழா போன்ற அரசு விழா நடத்தப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் “உங்களு டன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் பல் வேறு கட்டங்களாக 238 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகி றது. இம்முகாம் வருகின்ற செப்.30 ஆம் தேதி வரை நடைபெறவுள் ளது. அந்த வகையில் கொல்லி மலை வட்டாரத்தில் வாழவந்தி நாடு, தின்னனூர் நாடு மற்றும் சேலூர் நாடு, தேவனூர் நாடு ஆகிய பகுதிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தப்பட்டுள் ளது, என்றார். முன்னதாக, நிறைவு நாளில் இசைக் கலைஞர்களின் பரத நாட்டி யம், கரகம், மாடு ஆட்டம், மயில் ஆட்டம், பொய்க்கால் குதிரை ஆட் டம், தப்பாட்டம், ஒயிலாட்டம், காளி யாட்டம், பழங்குடியினர் நடனம், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகளின் பல்சுவை நிகழ்ச்சி கள் நடைபெற்றன. தொடர்ந்து, வல் வில் ஓரி விழா சிறப்பாக நடை பெற ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து துறை அலுவலர்களுக் கும் சால்வை அணிவித்து கௌர வித்தார். இந்நிகழ்ச்சியில் கொல்லி மலை அட்மாக்குழு தலைவர் எஸ்.செந்தில் முருகன், மாவட்ட வன அலுவலர் மாதவியாதவ், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் க.பா.அரு ளரசு, வருவாய் கோட்டாட்சியர் வே.சாந்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தே.ராம்குமார், மாவட்ட சுற்றுலா அலுவலர் மு.அபராஜி தன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் எம்.புவனேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.