tamilnadu

img

கந்துவட்டி கொடுமை: விசைத்தறித் தொழிலாளி தற்கொலை

கந்துவட்டி கொடுமை: விசைத்தறித் தொழிலாளி தற்கொலை

சிஐடியு-வினர் ஆர்ப்பாட்டம்

சேலம், ஜூன் 18- விசைத்தறித் தொழிலாளியின் தற்கொ லைக்கு காரணமான கந்துவட்டி அடியாட் களை கைது செய்ய வேண்டும், என வலியு றுத்தி சிஐடியு-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். சேலம் மாவட்டம், இடங்கணசாலை யைச் சேர்ந்தவர் மணி. விசைத்தறித் தொழி லாளியான இவர் தனது வீட்டை அடமானம் வைத்து, வெரிடாஸ் என்ற நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியுள்ளார். முறையாக வட்டி கட்டி  வந்த நிலையில், ஒரு மாதம் பணத்தை கட்ட தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் வெரிடாஸ் நிதி நிறுவன ஊழியர்கள் தொடர்ந்து தொல்லை அளித்ததால், மணி தற்கொலை செய்து கொண் டார். இந்நிலையில், விசைத்தறித் தொழிலா ளியின் தற்கொலைக்கு காரணமான தனி யார் நிதி நிறுவன ஊழியர்களை கைது செய்ய வேண்டும். சட்டவிரோத செயலில் ஈடுபட்ட கந்துவட்டி அடியாட்களை கைது செய்ய வேண்டும். நிதி நிறுவனத்திற்கு துணை போகும் மகுடஞ்சாவடி காவல் ஆய்வாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்து போன மணியின் மகன், மகள் ஆகியோரின்  கல்லூரி படிப்பிறகு கருணையுடன் அரசு உதவ  வேண்டும். நிற்கதியாய் நிற்கும் மணி குடும் பத்தின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதனன்று சிஐ டியு-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் கோட்டை மைதானத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு மாவட்டத் தலைவர் டி.உதயகுமார் தலைமை வகித்தார். இதில், சுமைப்பணித் தொழிலாளர் சங்க மாநி லத் தலைவர் ஆர்.வெங்கடாபதி, சிஐடியு மாவட்டச் செயலாளர் எ.கோவிந்தன், மாவட்ட உதவித்தலைவர் பி.பன்னீர்செல்வம், மாவட் டப் பொருளாளர் பி.இளங்கோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.