tamilnadu

img

உள்ளாட்சி நிர்வாகங்களில் தனியார்மயத்தை கைவிட வலியுறுத்தல்

உள்ளாட்சி நிர்வாகங்களில் தனியார்மயத்தை கைவிட வலியுறுத்தல்

திருப்பூர், ஜூலை 27- உள்ளாட்சி நிர்வாகங்களில் தனியார்மய நடவடிக்கைகளை கைவிட்டு தூய்மைப் பணியாளர், குடிநீர் பணியாளர் உள்ளிட்ட ஊழி யர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம்  வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள் ்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின்  திருப்பூர் மாவட்ட 4 ஆவது மாநாடு,  திருப்பூர் தியாகி பழனிசாமி நிலை யத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி. பழனிசாமி தலைமை வகித்தார். துணைச்செயலாளர் சங்கர் குமார் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநில பொதுச்செயலாளர் ஆர். பாலசுப்பிரமணியன் மாநாட்டை  துவக்கி வைத்து உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கே.ரங்க ராஜ், பொருளாளர் பி.ஈஸ்வரன் ஆகியோர் அறிக்கைகளை முன் வைத்தனர். இம்மாநாட்டில், மாநகராட்சி முதல் கிராம ஊராட்சி வரை அனைத்து உள்ளாட்சிகளிலும் குறைந்தபட்ச ஊதிய சட்டப்படி ஊதியம் வழங்க வேண்டும். உள் ளாட்சித் துறையில் தூய்மைப் பணி, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆப்ரேட்டர் பணிகளுக்கு அவுட்சோர்சிங் முறையில் ஆட் களை நியமிக்கும் தனியார் ஒப்பந்த  முறையை கைவிட வேண்டும். அர சாணை எண்கள்: 139, 152 ஆகிய வற்றை ரத்து செய்ய வேண்டும். கிராம ஊராட்சிகளில் வேலை செய் யும் பணியாளர்களை காலமுறை ஊழியர்களாக மாற்றி, தமிழ்நாடு அரசின் குறைந்தபட்ச ஊதிய சட் டப்படி மாத ஊதியம் வழங்க வேண்டும். லஞ்ச ஊழல் மோசடி கள் பெருமளவு நடைபெறுவதால், குப்பை பிரச்சனையில் ஒப்பந்த நிறுவனங்களுக்கு குப்பை எடை அளவில் தொகை வழங்கும் முறையை ரத்து செய்ய வேண்டும்.  ஊராட்சிகளில் தூய்மை காவலர்க ளுக்கு குறைந்தபட்ச சட்டப்படி ஊதியம் வழங்க வேண்டும். அனைத்து ஊழியர்களுக்கும் இஎஸ்ஐ, பிஎப், போனஸ் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க  வேண்டும், உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின்  மாவட்டத் தலைவராக பி.பழனி சாமி, செயலாளராக கே.ரங்கராஜ், பொருளாளராக பி.ஈஸ்வரன், துணைத்தலைவர்களாக 5 பேர், துணைச்செயலாளர்களாக 5 பேர்  உட்பட மாவட்டக்குழு தேர்வு செய் யப்பட்டது. சிஐடியு மாவட்ட  துணைத்தலைவர் கே.உன்னி கிருஷ்ணன் நிறைவுரையாற்றி னார்.