tamilnadu

கஞ்சா விற்பனை - இருவர் கைது

கஞ்சா விற்பனை - இருவர் கைது

கோவை, செப்.15- மலுமிச்சப்பட்டி அருகே கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்க முயன்ற இருவரை போலீ சார் கைது செய்து, 25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த னர். கோவை மலுமிச்சம்பட்டி அருகே கல்லூரி மாணவர் களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்யப்படு வதாக திங்களன்று செட்டிபாளையம் போலீசாருக்கு தக வல் கிடைத்தது. இதையடுத்து செட்டிபாளையம் போலீ சார் மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள சிட்கோ தொழிற் பேட்டை வளைவு அருகே திடீர் சோதனையில் ஈடுபட்ட னர். அப்போது அங்கு இருந்த இளைஞர் பையில் சுமார்  5 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதை யடுத்து இளைஞர் கொடுத்த வாக்குமூலம் அடிப்படை யில் திருப்பூர் ரயில் நிலையம் அருகே வேறு ஒரு நபர்  வைத்திருந்த 20 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்  செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஆந்திர மாநிலத்தை  சேர்ந்த கட்லா ராம லக்ஷ்மணன் (20),  மண்டா வீரபாபு  (21) ஆகிய இருவரை போலீசார் கைது செய்து, அவர் களிடமிருந்து 25 கிலோ கஞ்சாவை  பறிமுதல் செய்தனர்.  மேலும், இவர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.