tamilnadu

img

ஓய்வுபெற்ற தூய்மைப் பணியாளர்களுக்கு பாராட்டு

ஓய்வுபெற்ற தூய்மைப் பணியாளர்களுக்கு பாராட்டு

நாமக்கல், ஜூலை 2- நாமக்கல் மாநகராட்சி யில் பணியாற்றி ஓய்வுபெற்ற  தூய்மைப் பணியாளர் களுக்கு முன்னாள் ஒன்றிய இணை அமைச்சர் காந்தி செல்வன் விருந்து வைத்து,  பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். நாமக்கல் மாநகராட்சியில் பணியாற்றி வந்த தூய்மைப் பணியாளர்கள் 9 பேர் ஒரே  நாளில் ஓய்வு பெற்றனர். இதையடுத்து பணி  ஓய்வுபெற்ற தூய்மைப் பணியாளர்கள் மற் றும் தற்போது பணியிலுள்ளவர்களுக்கு சிறப்பு செய்யும் வகையில், முன்னாள்  ஒன்றிய இணை அமைச்சர் செ.காந்திசெல் வன், பாராட்டு நிகழ்ச்சி, நாமக்கல் மாநக ராட்சி திருமண மண்டபத்தில் நடத்தினார். ஓய்வுபெற்ற தூய்மைப் பணியாளர்களுக்கு பயனாடை அணிவித்து, பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஓய்வுபெற்ற பணியாளர்கள், பணியிலுள்ளவர்கள், அவ ரது குடும்பத்தினர் உள்ளிட்ட 500க்கும்  மேற்பட்டோருக்கு விருந்து அளிக்கப்பட் டது. அப்போது காந்திசெல்வன் பேசுகை யில், அனைவரும் தங்கள் வீடுகள், அலுவல கங்களில் சேகரமாகும் குப்பைகளை, தரம்  பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க  வேண்டும். இதன்மூலம் பொது சுகாதாரம் மேம்படும், என்றார். இந்நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.