tamilnadu

img

போக்குவரத்து ஊழியர்கள் 13 ஆவது நாளாக போராட்டம்

போக்குவரத்து ஊழியர்கள்  13 ஆவது நாளாக போராட்டம்

ஈரோடு, ஆக.30- போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கைகள் குறித்து அரசும், நிர்வாகமும் பேச மறுக்கும் நிலையில் 13 ஆவது நாளாக போராட்டம் நடைபெற்றது. ஊதிய ஒப்பந்தம், நிலுவைத் தொகை, அகவிலைப்படி உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு கடந்த 13 நாட்களாக தமிழக  முழுவதும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் மற் றும் ஓய்வூதியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர். அதன்ஒருபகுதி ஈரோடு மண்டல தலைமை அலுவல கம் நடைபெற்ற போராட்டத்திற்கு சிஐடியு மண்டல தலைவர்  எஸ்.இளங்கோ மற்றும் ஓய்வு பெற்றோர் அமைப்பின் தலை வர் பி.ஜெகநாதன் தலைமை வகித்தனர். சிஐடியு மாநில செய லாளர் சி.நாகராசன் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார்.  பன்முக தலைவர் என்.முருகையா பேசும் போது, பணியில் உள்ள தொழிலாளர்களும், ஓய்வு பெற்றவர்களும் 13 நாட் களாகப் போராடி வருகிறோம். தொடர் காத்திருப்பில் ஈடுபட் டுள்ளோம். ஆனால் அரசும், நிர்வாகமும் பேச்சுவார்த்தை நடத்த மறுப்பது சரியான அணுகுமுறையல்ல என்று குற்றம்  சாட்டினார். இதேபோன்று கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் போராட்டம் நடைபெற்றது.