போக்குவரத்து ஊழியர்கள் தொடர் போராட்டம்
ஈரோடு, ஆக.24- பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி போக்கு வரத்து தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் சிஐடியு அரசு போக்குவரத் துக் கழக ஊழியர்களும், ஓய் வூதியர்களும் இணைந்து தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். ஈரோடு மண்டல தலைமை அலுவலகம் முன்பு சனியன்று நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மண்டல தலைவர் எஸ்.இளங்கோ, ஓய்வூதியர் சங்க பி.ஜெகநாதன் தலைமை வகித்தார். இதில், சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந் தரராசன், மாவட்டத் தலை வர் எஸ்.சுப்ரமணியன், செய லாளர் எச்.ஸ்ரீராம், துணைத் தலைவர் ஆர்.ரகுராமன், போக்குவரத்து சங்க மண் டல பொதுச்செயலாளர் டி. ஜான்சன் கென்னடி, பன்முக தலைவர் என்.முருகையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இப்போராட் டத்திற்கு ஆதரவு தெரி வித்து, ஓய்வூதியர் அமைப் புகளின் தேசிய ஒருங்கிணைப்புக்குழு சார் பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அஞ்சல், ஆர்.எம்.எஸ். ஓய்வூதியர் சங்கச் செயலா ளர் என்.ராமசாமி தலைமை வகித்தார். அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட் டச் செயலாளர் என்.மணிபாரதி, தலைவர் வ. பன்னீர்செல்வம், ஓய்வுபெற்ற கல்லூரி ஆசி ரியர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜெய சங்கர் உட்பட பலர்கலந்து கொண்டனர். நீலகிரி நீலகிரி மாவட்டம், குன்னூரில் போக்கு வரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக சிஐ டியு-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகி கே.ராஜன் தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் சி.வினோத் கண் டன உரையாற்றினார். இதில் மாவட்டப் பொருளாளர் நவீன்சந்திரன், நிர்வாகி கே. ஜே.வர்கீஸ், மூத்த தோழர் சுப்பிரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். சேலம் சேலம், மெய்யனூர் போக்குவரத்து பணி மனை முன்பு நடைபெற்ற போராட்டத்தில், போக்குவரத்து ஊழியர் சம்மேளன மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் கண்டன உரை யாற்றினார். அப்போது, போராட்டத்தில் ஈடு பட்ட பெண்களுக்கு பயனாடை அணிவித்து, போராட்டம் வெல்ல வாழ்த்து தெரிவித்தார். இதில் சங்கத்தின் மண்டல பொதுச்செயலா ளர் கிருஷ்ணமூர்த்தி, தலைவர் கே.செம்பன், பொருளாளர் சேகர், ஓய்வுபெற்ற போக்குவ ரத்து தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வன், விரைவு போக்குவரத்து ஓய்வுபெற்ற தொழிற்சங்க நிர்வாகி மணி முடி உட்பட பலர் கலந்து கொண்டனர்.