tamilnadu

img

என்டிசி பஞ்சாலைகளை திறக்க வலியுறுத்தி கோவையில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

என்டிசி பஞ்சாலைகளை திறக்க வலியுறுத்தி கோவையில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை, ஜூன் 30 – நாடு முழுவதும் மூடப்பட்டுள்ள தேசிய பஞ்சாலை கழக (NTC) தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க வலியுறுத்தி, ஒன்றிய இணை அமைச்சர் பபித்ரா மார் கரிட்டா கோயம்புத்தூருக்கு வருகை தந்தபோது, சிஐடியு  உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத் தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். நாடு முழுவதும் தேசிய பஞ் சாலை கழகத்திற்கு சொந்தமான 23  பஞ்சாலைகள் சுமார் 50 ஆண்டு களுக்கும் மேலாக செயல்பட்டு வந் தன. ஆனால், கடந்த 2020 ஆம்  ஆண்டு முதல் தேசிய பஞ்சாலை  கழக நிர்வாகம் முடக்கப்பட்டுள் ளது. இது குறித்து பஞ்சாலை தொழி லாளர் சங்கங்கள் பலமுறை மத்திய  அரசுக்கு மனு அளித்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை. இதற்கிடையில், தொழிலாளர்களுக்கு வழங்கப் பட்டு வந்த ஊதியமும் நிறுத்தப் பட்டுள்ளது. இந்நிலையில், திங்களன்று, கோவை பந்தய சாலைப் பகுதி யில் உள்ள ஒரு தனியார் நட்சத் திர விடுதியில் நடைபெற்ற செயற்கை இழை கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்த ஒன்றிய இணை அமைச்சர் பபித்ரா மார்கரிட் டாவை முற்றுகையிடுவது என  தொழிற்சங்கத்தினர் முடிவெடுத்த னர். இதனையடுத்து, சிஐடியு, எச் எம்எஸ், ஏஐடியுசி உள்ளிட்ட எட்டு  தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஏராளமானோர் திரண்டனர். இதில், கோவை மாவட்ட மில் தொழிலா ளர் சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் சி. பத்மநாபன், சிஐடியு மாவட் டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஏஐடியுசி ஆறுமுகம், எச்எம்எஸ் ராஜாமணி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் பங் கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஒன் றிய அரசைக் கண்டித்தும், உடனடி யாக மூடப்பட்ட பஞ்சாலைகளைத் திறக்க வலியுறுத்தியும் முழக்கங் களை எழுப்பினர். இதனையறிந்த ஒன்றிய இணை அமைச்சர் பபித்ரா தொழிற்சங்க நிர்வாகி களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.  இதுகுறித்து பேசிய பஞ்சாலை  தொழிலாளர் சங்க மாவட்டச் செய லாளர் சி. பத்மநாபன், “கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கோவையில் செயல்பட்டு வந்த ஏழு பஞ்சாலை கள் மூடப்பட்டுள்ளன. இந்த ஆலை கள் அனைத்தும் மீண்டும் இயக்கப் பட வேண்டும். மேலும், ஓராண்டுக் கும் மேலாக நிலுவையில் உள்ள தொழிலாளர்களின் ஊதியங்களை உடனடியாக வழங்க வேண்டும். இ.எஸ்.ஐ., வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட சலுகைகளைத் தொழிலாளர்களுக்கு வழங்க  வேண்டும். இந்த கோரிக்கை களை கோவை வந்த மத்திய இணை அமைச்சரிடம் வலியுறுத்தி யுள்ளோம். இந்தக் கோரிக்கைகள் குறித்து உடனடியாக ஆய்வு செய்து, ஒன்றிய அமைச்சருடன் பேசி உரிய தீர்வு காண்பதாக அவர் உறுதியளித்துள்ளார். தொழிலாளர்களாகிய நாங்களும்  நம்பிக்கையோடு காத்திருக்கி றோம்” என்றார்.