tamilnadu

அமெரிக்க வரி விதிப்பால் பாதிப்புக்குள்ளாகும் திருப்பூர் சாய ஆலைகள்: உரிமையாளர்கள் வேதனை

அமெரிக்க வரி விதிப்பால் பாதிப்புக்குள்ளாகும் திருப்பூர் சாய ஆலைகள்: உரிமையாளர்கள் வேதனை

திருப்பூர், ஆக.28- திருப்பூரில் பின்னலாடைகளுக்கு சாயமி டும் ஜாப் ஒர்க் நிறுவனங்கள், கடந்த ஓராண்டு  காலமாக அதிநவீன இயந்திரங்களில் அதிக அளவில் முதலீடு செய்துள்ளன. தற்போது அமெரிக்க வரி விதிப்பால் சாய ஆலைகள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகும். எனவே உரிய நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர் சாய ஆலை உரிமையாளர் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.  இது குறித்து சாய ஆலை உரிமையா ளர்கள் சங்க தலைவர் காந்திராஜன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, உலகிலேயே முதல்முறையாக பூஜ்ஜிய நிலை சுத்திகரிப்பு முறையை திருப்பூர் சாய  ஆலைகள் செயல்படுத்தி வருகின்றன. இம் முறை,  சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை பாதுகாப்பதில் ஒரு குறிப்பிட்ட முன்னேற் றமாக உள்ளது. சர்வதேச தர நிலைகளை கடைபிடித்து சாயம் ஏற்றப்பட்டு வருகி றது. இந்நிலையில், அமெரிக்காவில் விதிக் கப்படும் கூடுதல் வரி சுமை, உலக சந்தை யில் நமது போட்டித் தன்மையை கடுமை யாக பாதிக்கும். பின்னலாடை ஏற்றுமதியில்  ஏற்படும் வளர்ச்சியை எதிர்பார்த்து, பல சாய மிடும் ஜாப் ஒர்க் நிறுவனங்கள் பையர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கடந்த  ஓராண்டு காலமாக அதிநவீன இயந்திரங்க ளில் அதிக அளவில் முதலீடு செய்துள்ளன.  தேவை மற்றும் ஏற்றுமதி அதிகரிக்கும் என்ற  எதிர்பார்ப்புடன் இந்த முதலீடுகள் செய்யப் பட்டன. ஆனால் தற்போதைய சூழ்நிலை குறிப்பிடத்தக்க பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இது நிறுவனங்களின் செயல் பாடுகள் மற்றும் வாழ்வாதாரத்தை பாதிக்கக் கூடும். எனவே சாய தொழிலை பாதுகாக்க,  தொழில்துறையின் நிதிச் சுமையை குறைக்க  கோவிட் தொடர்பான கடன்களை வசூலிப் பதில், மேலும் ஆறு மாதங்களுக்கு தற்காலிக  தடை விதிக்க வேண்டும். தொழில்துறையின ரின் கடன்களுக்கான வட்டியை மேலும் 6  மாதங்களுக்கு குறைக்க அல்லது ஒத்தி வைக்க வேண்டும். பின்னலாடை உற்பத்திச்  செலவை குறைக்க ஜாப் ஒர்க் கட்டணங் களை கட்டுப்படுத்துவதில், அரசு ஆதர வளிக்க வேண்டும்.  பொது சுத்திகரிப்பு நிலை யங்களில் சாய கழிவுநீர் சுத்தகரிப்பிற்கு ஆகும் செலவை குறைக்க மற்றும் சுய  தேவையை பூர்த்தி செய்ய சூரிய மின் நிலை யங்களை நிறுவ 85 சதவீதம் மூலதன மானி யம் வடிவில் நிதி உதவி அளிக்க வேண்டும். சுத்திகரிப்பு நிலையத்தின் அனைத்து சாய ஆலைகளும் சிறு குறு மற்றும் நடுத்தர நிறு வனங்களாக இருப்பதால், இந்த ஆதரவு அவற்றின் செயல்பாடுகளை மிகவும் நிலை யானதாக்கும். மேலும், உற்பத்தி  செலவை  குறைக்கவும் முக்கிய பங்கு வகிக்கும். தற் போது ஏற்பட்டுள்ள நெருக்கடியால் தொழி லாளர்கள் வேலை இழப்பதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜவுளி தொழில் அதிக தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய துறையா கும். இந்த தொழிலில் ஏற்படும் ஒவ்வொரு  பாதகமான தாக்கமும் பல்லாயிரக்கணக் கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தில் நேரடி விளைவை ஏற்படுத்தும். எனவே அர சின் ஆதரவு மற்றும் அவசர கால நட வடிக்கைகள் இந்த தொழில் தற்போதைய சவால்களை சமாளித்து நாட்டின் பொரு ளாதாரத்திற்கு தொடர்ந்து பங்களிக்க முடி யும். மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை அரசு  நிறைவேற்றித் தருவதன் மூலம் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் மற்றும்  திருப்பூர் பின்னலாடை தொழிலைச் சார்ந்த 3  லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்க ளின் வாழ்வாதாரம் காப்பாற்றப்படும் என  கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு  அரசின் ஜவுளி மற்றும் நிதித்துறை அமைச் சருக்கும் கோரிக்கை மனு அனுப்பி இருப்ப தாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.