ஊத்துக்குளியில் ஆசிரியர் செ.நடேசன் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி
திருப்பூர், செப். 17 - தமிழ்நாட்டின் ஆசிரியர் இயக் கத்தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒரு வரும், எழுத்தாளர், மொழி பெயர்ப்பா ளரான ஆசிரியர் செ.நடேசனின் மூன் றாம் ஆண்டு நினைவு தினம் புதன்கி ழமை கடைப்பிடிக்கப்பட்டது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஸ்தாபகத் தலைவராக வும், தனது பணி நிறைவுக்குப் பின்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உழைப்பாளி மக்களுக்கு ஓய்வறியாது பணியாற்றியவர், தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத் தின் திருப்பூர் மாவட்ட துணைத் தலை வராகவும் பணியாற்றியவர். தனது ஓய்வு காலத்தில் சிறந்த எழுத்தாளராக, விகடன் விருது பெற்ற மொழி பெயர்ப்பாளராகத் திகழ்ந்தவர், மக் கள் ஒற்றுமைக்காக வகுப்பு வாதத்தை எதிர்த்து கவனம் ஈர்க்கும் பேச்சாளராக திகழ்ந்த மார்க்சிய போராளி தோழர் செ.நடேசனின் மூன்றாம் ஆண்டு நினை வஞ்சலி நிகழ்ச்சி ஊத்துக்குளி இரயி லடி பேருந்து நிறுத்தம் அருகில் புத னன்று நடத்தப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சி யின் முன்னாள் தாலுகா செயலாளர் எஸ்.கே.கொளந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சுப்பிர மணியன், ஆர்.குமார், தாலுகா செய லாளர் கு.சரஸ்வதி, மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் பெ.ஜார்ஜ், ஓய்வு பெற்ற ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட் டத் தலைவர் நா.சண்முகம், மளிகை கடை உரிமையாளர் கே.செல்வகுமார், நண்பர் சு.ராமகிருஷ்ணன் ஆகியோர் நினைவஞ்சலி உரை நிகழ்த்தினர். ஊத்துக்குளி ஆர்.எஸ். முன்னாள் கிளைச் செயலாளர் வி.கே.பழனிசாமி நன்றி கூறினார். இந்த நிகழ்வில் காங்கி ரஸ் கட்சியின் நகரப் பொறுப்பாளர் குண சேகரன், மார்க்சிஸ்ட் கட்சி தாலுகா குழு உறுப்பினர்கள் ப.வண்ணக்கொடி, கை. குழந்தைசாமி, வி.காமராஜ், மாதர் சங்க தாலுகா தலைவர் சசிகலா, வாலிபர் சங்க தாலுகா பொருளாளர் நாகராஜ், சிஐடியு சங்கத் தலைவர் பெரியசாமி, கருமாண்டகவுண்டனூர் கிளைச் செய லாளர் துரைராஜ் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.