மாணவரின் அழைப்பையேற்று பள்ளிக்கு சென்ற ஆட்சியர்!
நாமக்கல், ஜூலை 18- அரசுப்பள்ளி மாணவரின் அழைப்பையேற்று, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி, அப்பள் ளிக்கு சென்று கலந்துரையாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி பேரூராட்சியில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் லோ.விஜய் என்பவர் 10 ஆம் வகுப்பு படித்து வருகி றார். இவர், ‘தாங்கள் ஆட்சியர் பணிக்கு எவ்வளவு கடி னமாக உழைத்து வந்துள்ளீர்கள் என்பதை அறிந் தேன். எனவே தாங்கள் எங்களது பள்ளிக்கு வர வேண் டும்’ எனக்கோரி மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்திக்கு கடிதம் அனுப்பியிருந்தார். தொடர்ந்து, ஆட்சியராக பொறுப்பேற்ற 2 ஆம் நாள் மேற்கண்ட மாணவரின் கடிதம் துர்காமூர்த்திக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. தொடர்ந்து, மாணவனின் கோரிக்கையை நிறைவேற் றும் வகையில், வியாழனன்று எருமப்பட்டி பேரூ ராட்சியில் ஆய்வுப்பணிகள் மேற்கொண்ட பொழுது, அங்குள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று, மாணவன் விஜய் பயிலும் வகுப்பறைக்கு சென்று அவரை சந்தித்து கலந்துரையாடினார். மேலும், மாணவர்களுடன் கலந்துரையாடிய ஆட்சியர், நீங்கள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு, பல்வேறு சாதனையாளர்களாக வர வேண்டும் என அறிவுரை வழங்கினார்.