tamilnadu

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்; ஆர்ப்பாட்டம்

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்; ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூலை 9 - ஒன்றிய மோடி அரசின் நாசகர கொள்கைகளுக்கு எதிராக மத்திய தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய பொது  வேலைநிறுத்தம் அறிவித்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் ஜாக்டோ ஜியோ  அமைப்பினர் வேலை நிறுத்தத்தில் பங் கேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஜாக்டோ ஜியோ திருப்பூர் வடக்கு,  தெற்கு ஒன்றியத்தின் சார்பில் திருப்பூர்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. ஜாக்டோ ஜியோ தெற்கு ஒருங்கி ணைப்பாளர் ப.கனகராஜா தலைமை ஏற்றார். திருப்பூர் வடக்கு ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் ர.பால சுப்பிரமணியன், தொடக்கப்பள்ளி ஆசி ரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் சத்தி யசீலன் ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். போராட்ட கோரிக்களைகளை வலி யுறுத்தி அரசு ஊழியர் சங்க மாவட் டத் தலைவர் பாண்டியம்மாள், தமிழ க ஆசிரியர் கூட்டணி செல்வகுமார், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெய லட்சுமி, தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட் டணி மாவட்டச் செயலாளர் ஜோசப்,  அரசு ஊழியர் சங்க முன்னாள் தலைவர்  ராணி, அரசு கலைக்கல்லூரி பேராசிரி யர் கழகம் சார்பில் பாலசுப்பிரமணி யன், சத்துணவு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் ஆதிலட்சுமி, கிராம  சுகாதார செவிலியர் சங்க மாநிலத் தலை வர் அன்னபூரணி, மருத்துவத் துறை நிர் வாக ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் அந்தோணி ஜெயராஜ் ஆகி யோர் கோரிக்கை விளக்கவுரை ஆற்றி னர். அரசு ஊழிய சங்கத்தைச் சேர்ந்த  கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார். இந்த  ஆர்ப்பாட்டத்தில் 110 பேர் பங்கேற்ற னர். உடுமலை வட்டாட்சியர் அலுவல கம் முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பி னர் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  வேலு மணி தலைமை வகித்தார். கூட்டமைப் பின் நிர்வாகிகள் ஆசிரியர் செல்லத் துரை, தங்கவேல், குமார், தர்மராஜ், நாச்சிமுத்து, வெங்கடேஷ், எலிசபெத், தங்கபாண்டி மற்றும் ஆறுமுகம் ஆகி யோர் வாழ்த்தி பேசினர். அரசு ஊழியர்  சங்கத்தின் மாநிலச் செயலாளர் அம்ச ராஜ் கண்டன உரையாற்றினார். நிறை வாக உடுமலை வட்டக்கிளை செயலா ளர் வெங்கிடுசாமி நன்றி கூறினார். மடத்துக்குளம் வட்டாட்சியர் அலுல கம் முன்பு நடைபெற்ற வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் ஜோதிராமன் தலைமை வகித்தார். இதில் சண்முகசுத்தரம், சிவக்குமார், பாலு, அபிராமி,கணேஷ் மற்றும் வைர முத்து ஆகியோர் வாழ்த்தி பேசினர்.கூட்டமைப்பின் தலைவர் முருகசாமி கண்டன உரையாற்றினார். உடுமலை மற்றும் மடத்துகுளம் பகுதியில் முழு மையான அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண் டனர். ஊத்துக்குளி வட்டாட்சியர் அலுவ லகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க வட்டக் கிளை தலைவர் சுகந் தன் தலைமை வகித்தார். வட்டக்கிளைச்  செயலாளர் லட்சுமணன் கோரிக் கையை விளக்கி பேசினார். மாவட்டத் தலைவர் ராஜேஸ்வரி, மாவட்ட இணைச் செயலாளர் ஆர்.ராமன் ஆகி யோர் சிறப்புரையாற்றினர். வட்டக் கிளை பொருளாளர் தேன்மொழி நன்றி  கூறினார். தாராபுரத்தில் வட்டாட்சியர் அலுவ லகம் முன்பு ஜாக்டோ ஜியோ நடத் திய ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார  ஒருங்கிணைப்பாளர் கே.செந்தில்கு மார், ஆறுமுகம் தலைமை ஏற்றனர்.வரு வாய் அலுவலர் சங்க மாவட்டப் பொரு ளாளர் ஆறுமுகம், மாவட்ட துணைத்த  லைவர் நடராஜன், கூட்டமைப்பின் நிர் வாகிகள் ராஜேஷ், சாந்தி, பொன்னு சாமி, கிருஷ்ணன், செல்வகுமார், வெங் கடகிருஷ்ணன், உள்ளிட்டோர் வாழ்த் திப் பேசினர். மாவட்ட ஒருங்கிணைப் பாளர் மா.பாலசுப்பிரமணியம் நிறை வுரை ஆற்றினார். 20 பெண்கள் உள்பட  180 பேர் பங்கேற்றனர். வட்டார ஒருங் கிணைப்பாளர் தில்லைநாதன் நன்றி கூறினார்.