2 ஆவது நாளாக ஆசிரியர்கள் போராட்டம் - கைது
சேலம், ஜூலை 18- தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு அரசு தொடக்கக் கல்வி ஆசிரியர் கள் இரண்டாவது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் தன்பங்கேற்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத்தை நடைமுறைபடுத்த வேண்டும், ஊதிய முரணை நீக்கி, ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு இணை யான ஊதியம் வழங்க வேண்டும், உயர் கல்விக்கான ஊக்கத் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரி யர் இயக்கங்களின் கூட்டு நடவ டிக்கைக்குழு (டிட்டோ ஜேக்) அமைப் பினர் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தொடக்கக்கல்வி ஆசிரியர் மன்ற மாவட்டத் தலைவர் சங்கர் தலைமை வகித்தார். இதில் கூட்டமைப்பின் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் கோ.நாகராஜன், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் நல்லம்பாள், தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்டச் செயலாளர் சந்திரசேகர், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்க நிர் வாகி பிரபு உட்பட 150க்கும் மேற்பட்ட ஆசிரியர், ஆசிரியைகளை கலந்து கொண்டனர். அப்போது, அனுமதி யின்றி ஆர்ப்பாட்டம், சாலை மறிய லும் ஈடுபட்டதாகக்கூறி, ஆசிரியர் களை காவல் துறையினர் கைது செய்தனர். நாமக்கல் நாமக்கல் பழைய பேருந்து நிலை யம் அருகே உள்ள பூங்கா சாலை யில் நடைபெற்ற மறியல் போராட் டத்தை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் முத்துசாமி துவக்கி வைத்தார். மாநில உயர் மட்டக்குழு உறுப்பினர் முருகசெல்வ ராசன், மாவட்ட ஒருங்கிணைப்பா ளர்கள் பழனியப்பன், சங்கர், உயர் மட்டக்குழு உறுப்பினர்கள் அண்ணா துரை, கார்த்திக்கேயன், கலைச்செல் வன் உட்பட திரளான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில், 150க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்து, தனி யார் திருமண மண்டபத்தில் அடைத்த னர். கோவை கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே கூடிய ஆசிரியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.