மதிய உணவு அருந்திய மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
தருமபுரி, அக்.10- பாலக்கோடு அருகே அர சுப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட 17 மாணவர்கள் மருத்துவமனையில் அனும திக்கப்பட்டனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கண் சால் பைல் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 40க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வரு கின்றனர். இந்நிலையில், புத னன்று பள்ளியில் வழங்கப் பட்ட மதிய உணவை சாப் பிட்ட மாணவிகள் சிலருக்கு அடுத்த சில மணி நேரத்தில் வாந்தி ஏற்பட்டது. இதன் பின் பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்ற பிறகும் ஏராளமான மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள் ளது. இதையடுத்து 17 பேர் பாலக்கோடு அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட னர். இதில் 3 மாணவர்கள் உயர் சிகிச்சைக்காக தரும புரி அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து காவல் துறை யினர், கல்வித்துறை அதிகா ரிகள் விசாரித்து வருகின்ற னர்.