எடப்பாடியை புறக்கணித்த செங்கோட்டையன்
கோவை, ஜூலை 8- அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியின் தேர்தல் சுற்றுப்பய ணத்தில், மூத்த தலைவர்களில் ஒரு வரான முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் இந்த நிகழ்ச்சி யில் பங்கேற்காமல் ஒதுங்கியிருப் பது சர்ச்சையை ஏற்படுத்திள்ளது. அதிமுகவில் எம்ஜிஆர், ஜெய லலிதா காலத்தில் இருந்து மேற்கு மண்டலத்தின் முகமாகத் திகழ்ந்த வர் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன். எடப்பாடி பழ னிசாமி தலைமையில் செயல்பட்டு வந்த அவர், சமீப காலமாக எடப் பாடியுடன் கருத்து வேறுபாடுக ளால் மோதலில் ஈடுபட்டார். பின்னர் சமரசம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டா லும், தற்போதைய நிகழ்வு அந்த சம ரசம் உண்மையல்ல என்பதை வெளிப்படுத்தியுள்ளது. கோவையில் எடப்பாடி தொடங் கிய பிரச்சார சுற்றுப்பயணத்தில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன், பாஜக மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன், பாஜக தமிழக பொறுப் பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆனால், அதிமுகவின் மேற்கு மண்டத்தின் முகமாக கருதப்படும் செங்கோட்டையன் இந்நிகழ்ச்சி யில் பங்கேற்கவில்லை. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையத்தில் உள்ள தனது இல் லத்தில் காலை முதல் முகாமிட்டி ருந்த அவர், கோவையில் நடை பெற்ற இந்த முக்கிய பிரச்சார நிகழ்ச்சியில், அருகிலேயே இருந் தும் பங்கேற்காமல் ஒதுங்கியது, அதிமுகவில் உட்கட்சி மோதல்கள் இன்னும் தீரவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
எடப்பாடியை கண்டுகொள்ளாத மக்கள்..!
கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கியிருந்த அதிமுக பொதுச்செயலா ளர் எடப்பாடி பழனிசாமி, அதிகாலையில் பந்தய சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப் போது அவர், அப்பகுதியில் வழக்கம்போல் நடை பயிற்சி மேற்கொண்டிருந்த பொதுமக்களை சந் தித்து பேச முயன்றார். ஆனால், அவர்கள் யாருமே எடப்பாடி பழனிசாமியை கண்டுகொள்ளவில்லை. அவர்கள், எப்போதும்போல் படுவேகமாக நடை பயிற்சி செய்துகொண்டிருந்தனர். இதனை பார்த்த அதிமுக நிர்வாகிகள், எடப்பாடி பழனிச்சாமி வந் திருக்கிறார் ஏதாவது பேசுங்க என அழைத்தனர். அப் போதும், யாரும் வரவில்லை. எடப்பாடி பழனி சாமியை சுற்றி கேமராக்களும், அதிமுகவினரும் சூழ்ந்து இருந்ததால், யாரும் அருகில் செல்லவும் முடியவில்லை. இதையடுத்து அருகே இருந்த எஸ். பி.வேலுமணி அந்த பகுதில் உள்ள டீ கடைக்கு எடப் பாடி பழனிசாமியை அழைத்து சென்றார். ஆனால் அங்கும் கூட்டம் இல்லை. அங்கு டீ முழுமையாக குடிக்கும் வரை யாரும் பேச வரவில்லை. நிலை மையை உணர்ந்த எடப்பாடி பழனிசாமி. அவராகவே நடைபாதையில் வியாபாரம் செய்துகொண்டிருந்த எலுமிச்சை பழம் வியாபாரியிடம் சென்று பேச்சு கொடுத்தார். 20 எலுமிச்சை பழம் வாங்கிக்கொண்டு, 100 ரூபாய் கொடுத்தார். ஹோட்டலில் இருந்து சுமார் 400 மீட்டர் தொலைவிற்கு மட்டுமே நடந்து வந்த நிலையில் திரும்பிச் சென்ற போது தனது காரி லேயே சென்றார்.