tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

பள்ளி வாகனம் கவிழ்ந்து மாணவிகள் காயம்

ஈரோடு, செப்.28- சென்னிமலை அருகே சாலையில் தனியார் பள்ளி  வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இரு மாண விகள் காயமடைந்தனர். ஈரோடு மாவட்டம், சென்னிமலை, அரச்சலூர் சாலை,  வீரப்பம்பாளையம் பகுதியில் தனியார் பள்ளி  செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு, சென்னி மலையை அடுத்த, மேலப்பாளையத்தைச் சேர்ந்த குரு சாமி என்பவர், ஒப்பந்த அடிப்படையில் மாணவர் களை அழைத்து செல்லும் வகையில் வேன் ஓட்டி வரு கிறார். இந்நிலையில், சனியன்று காலை வழக்கம் போல் 16 மாணவ, மாணவிகள் மற்றும் 3 ஆசிரியை களை ஏற்றிக் கொண்டு, வேன் சென்னிமலையில் இருந்து புறப்பட்டு பள்ளிக்கு சென்று கொண்டிருந் தது. அம்மாபாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, வேனுக்குள் அமர்ந்திருந்த சிறுமியின் கையில் இருந்த தண்ணீர் பாட்டில் தவறி வேனுக்குள் விழுந்து,  உருண்டு சென்று வேனின் கிளட்ச் அடியில் சிக்கிக்  கொண்டதால், ஓட்டுநரால் பிரேக் போட முடியவில்லை.  இதனால் நிலை தடுமாறிய வேன் சாலையில் கவிழ்ந்தது. இதைக்கண்ட அப்பகுதியினர் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியைகளை மீட்டனர். இவ்விபத்தில் 9 மற் றும் 10 வயதுடைய இரு மாணவிகளுக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ்  மூலம் சென்னிமலையில் உள்ள அரசு ஆரம்ப சுகா தார நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். மற்ற  மாணவ, மாணவிகள் மாற்று வாகனத்தில் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்விபத்து குறித்து சென்னிமலை காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

நிலத்தை கிரயம் செய்து தராமல் மோசடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

சேலம், செப்.28- பணத்தை பெற்றுக்கொண்டு நிலத்தை கிரயம் செய்து தராமல் மோசடி செய்து, கொலை மிரட்டல்  விடுக்கும் ரியல் எஸ்டேட் உரிமையாளர் மீது நடவ டிக்கை எடுக்கக்கோரி மாநகரக் காவல் ஆணையர் அலு வலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகாரளித்தார். சேலம் மாவட்டம், அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சரண்யா (32). இவர் மாநகரக் காவல் ஆணை யர் அலுவலகத்தில் சனியன்று புகார் மனு ஒன்றை அளித் தார். அதில், கணவரை பிரிந்து தனியாக குழந்தையு டன் வசித்து வரும் நான், தனியார் நிறுவனத்தில் கடந்த  10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். இந்நிலை யில், சமூக வலைதளங்களில் சேலம் மாநகரில் நிலம்  விற்பனைக்கு உள்ளதாக குரங்குசாவடி பகுதியில் செயல்பட்டு வரும் நிறுவனத்தின் விளம்பரத்தை நம்பி, நிலம் வாங்க அந்த நிறுவனத்தை அணுகினேன். அப் போது 2 ஆயிரம் சதுர அடி நிலம் கோரிமேட்டில் உள் ளது. அந்நிலத்தை வாங்குவதற்காக, கடந்த 10 ஆண்டுகளாக சேமித்த பணம் மற்றும் நகைகளை அட மானம் வைத்து நிலத்துக்கு முன்பணமாக ரூ.15 லட் சத்தை அவரது வங்கிக் கணக்கு மூலமாகவும், ரூ.5  லட்சத்தை ரொக்கமாகவும் கொடுத்தேன். ஆனால் அவர்கள் கூறியபடி நிலத்தை கிரயம் செய்து தரவில்லை. இதுகுறித்து முறையிட்டதற்கு, தற்போது நிலத் தின் மதிப்பு உயர்ந்துவிட்டதால், மேலும் பணம் தந்தால்தான் நிலத்தை கிரயம் செய்து தருவோம் என  கூறுகின்றனர். இந்நிலையில், நிலம் வேண்டாம் செலுத் திய பணத்தை கொடுங்கள் எனக் கேட்டதற்கு கொலை  மிரட்டல் விடுக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட ரியல்  எஸ்டேட் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுத்து  பணத்தை மீட்டுத்தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள் ளது.

கல்வி உபகரணங்கள் வழங்கல்

நாமக்கல், செப்.28- அரசுப்பள்ளிக்கு கல்வி உபகரணங் களை முன்னாள் மாணவர்கள் வழங்கினர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அரசு  மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கல்வி பயின்ற 2014 - 15 ஆம் ஆண்டை சேர்ந்த முன்னாள் மாணவர்கள் சந்தித்துக் கொள்ளும் நிகழ்ச்சியானது பள்ளி  வளாகத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. இதில் ஏராளமான முன்னாள் மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்து, நட்பு பாராட்டி, தங் கள் கல்வி பயின்ற பள்ளியினுள் சென்று, நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து பள்ளிக்கு உதவும் பொருட்டு சுமார் ரூ.20 ஆயிரம் மதிப்பீட் டில் மூன்று பீரோக்கள் மற்றும் கல்வி உபகர ணங்கள் ஆகியவற்றை பள்ளிக்கு வழங்கி னர்.

அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடத்திற்கு ‘சீல்’

உதகை, செப்.28- அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடத் திற்கு உதகை நகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். நீலகிரி மாவட்டம் மலைப்பகுதி யாகவும், அதிக வனப்பகுதிகளை கொண்டதாகவும் உள்ளது. நீலகிரியின்  சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பேரிடர் ஏற்படுவதை கருத்தில் கொண்டும் மாஸ்டர் பிளான் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டக்கூடாது; வீட்டுக்கு என்று அனுமதி பெற்று  கட்டப்பட்ட கட்டிடத்தை தங்கும் விடுதி  மற்றும் வணிகக் கட்டிடங்களாக மாற் றக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள் ளது. ஆனாலும், உதகை நகரில் பல் வேறு பகுதிகளில் விதிகளை மீறி கட்டி டங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந் நிலையில், உதகை ரோகினி பகுதியில்  அனுமதியின்றி வணிக வளாகம் கட்டப் பட்டு வருவதை அறிந்து, நகராட்சி நிர் வாகம் சார்பில் அண்மையில் நோட் டீஸ் வழங்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து பணிகள் நடைபெற்று வரு வதையறிந்த உதகை நகராட்சி ஆணை யர் கணேசன், நகராட்சி கட்டிடப்பிரிவு ஆய்வாளர் மகேந்திரன் உள்ளிட்ட அதி காரிகள், சனியன்று அந்தக் கட்டிடத் துக்கு ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுத்த னர்.