மாற்றுத்திறனாளிகள் சங்க சேலம் மாவட்ட மாநாடு துவக்கம்
சேலம், ஆக.31- மாற்றுத்திறனாளிகள் சங்க சேலம் மாவட்ட 5 ஆவது மாநாடு, ஓமலூரில் ஞாயிறன்று பேரணி, பொதுக்கூட்டத்து டன் துவங்கியது. தமிழ்நாடு அனைத்துவகை மாற் றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப் போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சேலம் மாவட்ட 5 ஆவது மாநாடு ஓம லூரில் ஞாயிறன்று துவங்கியது. முன்ன தாக, வட்டாட்சியர் அலுவலகத்திலி ருந்து ‘மாற்றுத்திறனாளிகள் உரிமை காக்கும் பேரணி’ துவங்கியது. சங்கத் தின் மாநிலத் தலைவர் தோ.வில்சன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதையடுத்து எஸ்.விக்டர் அருளானந் தம் நினைவுத்திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.ஹரிகிருஷ்ணன் தலைமை வகித்தார். இணைச்செயலாளர் ஆர்.அமலா ராணி வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் பி.ஜான்சி ராணி, மாநிலத் தலைவர் தோ.வில்சன், துணைச்செயலாளர் ஜீ.தமிழ்செல்வி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம். குணசேகரன், பொருளாளர் எம்.கனக ராஜ், துணைத்தலைவர்கள் வி.கே.வெங்கடாசலம், எஸ்.அம்மாசி, ஜே. ஜான் பெர்னாண்டஸ், இணைச்செயலா ளர்கள் ஏ.கந்தன், பி.பி.உமாகாந்த் உட் பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், தாலுகா செயலாளர் சாவித்திரி நன்றி கூறினார். தொடர்ந்து திங்களன்று (இன்று) பிரதிநிதிகள் மாநாடு நடை பெறவுள்ளது.