tamilnadu

img

ஓய்வு கால பலன்களை வழங்க வேண்டும்

ஓய்வு கால பலன்களை வழங்க வேண்டும். ஊதிய ஒப்பந்தப் படி வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை வழங்க வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 23 நாட்களாக தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு போக்கு வரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, சிஐடியுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு, சூரம்பட்டி 4 ரோட்டில் செவ் வாயன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலை வர் எஸ்.சுப்ரமணியன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலா ளர் கே.மாரப்பன், பொருளாளர் வி.சுரேஷ்பாபு, நிர்வாகிகள் என்.முருகையா, சி.ஜோதிமணி, வி.பாண்டியன், கனகராஜ் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.