tamilnadu

img

கோவை – காணாமல் போன சிறுமி முட்புதரில் சடலமாக மீட்பு  

கோவை - காணாமல் போன சிறுமியை முட்புதருக்குள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

கோவை – சரவணம்பட்டியை அடுத்த சிவானந்தபுரம் பகுதியை சேர்ந்த கோவிந்தன் என்பவரின் 15 வயது மகள் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 10 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதனிடையே டிசம்பர் 11 ஆம் தேதி சிறுமி திடீரென மாயமாகியுள்ளார். இந்த சம்பவம் குறித்து கோவை காந்திபுரம் அனைத்து மகளிர் காவர் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.  இந்த நிலையில் இன்று சரவணம்பட்டி யமுனா நகர் அருகே உள்ள முட்புதர் ஒன்றில் கை, கால், வாய் கட்டப்பட்ட நிலையில் காணாமல் போன சிறுமி சாக்குமூட்டையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்து, போலீசார் உடலை மீட்டனர்.  சிறுமியை கொடூரமாக கொலை செய்யப்பட்டு, சாக்குமூட்டையில் வீசியது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

;