tamilnadu

மோசடியில் ஈடுபட்ட ரியல் எஸ்டேட் நிறுவனம்

மோசடியில் ஈடுபட்ட ரியல் எஸ்டேட் நிறுவனம்

கோவை, ஜூலை 8- அனைத்து வசதிகளும் இருப்பதாக கூறி  அடுக்குமாடி கட்டிடத்தை விற்பனை செய்து  மோசடியில் ஈடுபட்ட ரியல் எஸ்டேட் நிறுவ னம் மீது உரிய நடவடிக்கை எடுக்க குடியி ருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டம், சரவணம்பட்டியில் இருந்து துடியலூர் செல்லும் சாலையில் உள்ள கே.ஜி டவுன் சிட்டி & டெவலப்பர்ஸ் டெக்னோபோல் என்ற அடுக்குமாடி குடியி ருப்பு உள்ளது. இதனை கடந்த எட்டு ஆண்டு களுக்கு முன்பு அந்த நிறுவனத்தினர் 120க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு அந்த அடுக்குமாடியில் உள்ள வீடுகளை விற்பனை செய்துள்ளனர். அதில் அனைத்து வசதிக ளும் செய்துள்ளதாகவும், மேலும் கழிவு நீர் செல்வதற்கு சுத்திகரிப்பு நிலையம் அமைத்து வெளியேற்ற அனைத்து வசதிக ளும் செய்து தருவதாக உறுதியளித்திருந் தனர். ஆனால், எந்த ஒரு வசதியும் தற்பொ ழுது வரை செய்து கொடுக்காமல், மோசடி யில் ஈடுபட்டதாக குடியிருப்பு வாசிகள் குற் றம் சாட்டி உள்ளனர். மேலும், இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், இப்பகுதி முழுவதும் கழிவு நீர்  சூழ்ந்து, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கோரிக்கை விடுத்துள்ளனர்.