திருப்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு
திருப்பூர், அக்.17- திருப்பூர் ரயில் நிலையத்தில், முன்ப திவு செய்யப்பட்ட பெட்டிகளின் முன்ப திவு செய்யாத பயணிகள் ஏறுவதை தடுக்க ரயில்வே நிர்வாகம் சார்பில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. திருப்பூரில் உள்ள பனியன் மற்றும் அதை சார்ந்த நிறுவனங்கள், உற்பத்தி ஆலைகள், பேக்கரி மற்றும் உணவகங் கள், கட்டுமான நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் இந்தியா வின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்ற னர். ஆண்டு முழுவதும் திருப்பூரில் தங்கி பணிபுரிந்து வரும் இப்பணியாளர் கள் தொடர் விடுமுறை மற்றும் பண் டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் வரும் அக்.20 ஆம் தேதி தீபாவளி பண் டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் திருப்பூரில் உள்ள வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலா ளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், கடந்த வாரம் முதலே திருப் பூர் மார்க்கமாக வட மாநிலம் செல்லும் ரயில்களில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்க ளுக்கு சென்று வருகின்றனர். கடந்த ஒரு வார காலமாகவே வட மாநிலம் செல் லும் ரயில்களில் கூட்ட நெரிசல் அதிக ரித்து வந்தது. இந்நிலையில் கடந்த 12 ஆம் தேதி எர்ணாகுளத்தில் இருந்து பாட்னா சென்ற ரயிலில் முன்பதிவு பெட்டிகளில், முன்பதிவு இல்லாத வட மாநில தொழிலாளர்கள் அதிகம் பேர் ஏறி பயணித்ததால் முன்பதிவு செய்த பயணிகள் இடையூறுக்குள்ளானதாக பெண்கள் வெளியிட்ட வீடியோ சமூக வளையத்தில் வைரலானது. இதை தொடர்ந்து ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் முன்பதிவு செய்யாத பயணிகள் ஏறு வதை தடுக்க கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த ரயில்வே நிர்வாகம் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் ரயில் நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட ரயில்வே காவலர்கள் மற்றும் 10 க்கும் மேற்பட்ட டிக்கெட் பரிசோதகர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து கோவை, திருப்பூர், சேலம் வழியாக டாட்டா நகர் வரை செல்லும் ரயில் மற்றும் கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து கோவை, திருப்பூர், சென்னை வழியாக ஜார்க் கண்ட் மாநிலம் தன்பாத் வரை செல்லும் ரயிலில் செல்வதற்காக அதிக அளவி லான வட மாநிலத் தொழிலாளர்கள் வந் தனர். அவர்களை முன் பதிவு பெட்டிக ளில் ஏறக்கூடாது என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்து கட்டுப்பாடு விதித்தனர். மேலும் டிக்கெட் பரிசோ தர்களும், பயணிகளின் டிக்கெட்களை பரிசோதனை செய்து ரயில்களில் ஏற அனுமதித்தனர். இதேபோல் ரயில்க ளில் வெடி விபத்தை ஏற்படுத்தக்கூடிய பட்டாசு உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்லக்கூடாது என ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்திய நிலையில் அது குறித்தும் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படைப்பிரிவு போலீசாரும் மோப்பநாய், டிடெக்டர் உள்ளிட்டவை கொண்டு சோதனை மேற்கொண்டனர். கூடுதல் ரயில்கள் இயக்க வைத்த கோரிக்கை என்னாச்சு? தமிழ் நாட்டின் மேற்கு மாவட்டங் களான கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட பகுதிகளில் வட மாநில தொழிலாளர்கள் பல லட்சம் பேர் பணி புரிந்து வருகின்றனர். இவர்கள் தொடர் விடுமுறை நாட்களில் சொந்த ஊர் செல் வது வழக்கம். இதற்காக கூடுதல் ரயில் மற்றும் ரயில்களில் பெட்டிகள் கூடுத லாக்கப்பட வேண்டும் என பல ஆண்டுக ளாக பயணிகளும், தொழில்துறையின ரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் ஒன்றிய அரசு இதில் கவனம் செலுத்தா மல் உள்ளது. இதனால், ரயில்களில் பயணிக்கும் வட மாநில தொழிலாளர் கள் மூச்சு விடுவதற்கு கூட சிரமமான நிலையில் 3 நாட்கள் வரை நின்று கொண்டே பயணிக்கும் சூழல் ஏற்பட் டுள்ளது.
