tamilnadu

img

தனியார் பேருந்துகள் ஊருக்குள் வராததால் பொதுமக்கள் அவதி

தனியார் பேருந்துகள் ஊருக்குள் வராததால் பொதுமக்கள் அவதி

சேலம், ஜூலை 18- தனியார் பேருந்துகள் ஊருக்குள் வராமல், புறவழிச் சாலையை பயன்படுத்தி செல்வதால் கடும் அவதிக்குள் ளாகி வருவதாக, பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் புகாரளித்தனர். சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் பேருந்து நிறுத்தம் மிகவும் முக்கிய பேருந்து நிறுத்தமாக கருதப் படுகிறது. சென்னை மார்க்கமாக செல்லும் பேருந்து கள் இந்த வழியே செல்ல வேண்டும். மேலும் திருவண்ணா மலை, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், கள்ளக்குறிச்சி, வேலூர்  ஆகிய மாவட்டங்களுக்கு செல்லும் பிரதான வழிதடமா கவும், ஆந்திரா, தெலுங்கானா, கேரளம் போன்ற மாநிலங் களை இணைக்கும் முக்கிய சாலையாகவும் அயோத்தி யாபட்டினம் பகுதி உள்ளது. பெரும்பாலும் விழுப்புரம் கோட்டத்திற்குட்பட்ட பேருந்துகள் மட்டும் வந்து நின்று செல்கின்றன. தனியார் பேருந்துகள் அயோத்தியாப் பட்டணம் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல், ஊருக்கு முன்பாக உள்ள உடையாப்பட்டி நெடுச்சாலையில் பிரிந்து  புறவழிச்சாலையை மட்டும் பயன்படுத்துவதால், இவ்வழியே செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வரு கின்றனர். தனியார் பேருந்துகள் அயோத்தியாப்பட்டணம் பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்ல வேண்டும். பர்மிட் இல்லாத உடையாபட்டி புறவழிச்சாலையை பயன்படுத்தக்கூடாது என வலியுறுத்தி போக்குவரத்து அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதி பொது மக்கள் வெள்ளியன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் மனு அளித்தனர்.