tamilnadu

img

8 ஆவது ஊதியக்குழுவை அமல்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்

8 ஆவது ஊதியக்குழுவை அமல்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஆக.29- 8 ஆவது ஊதியக்குழுவை உட னடியாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். ஒன்றிய, மாநில அரசு ஊழியர் களுக்கு அறிவிக்கப்பட்ட 8 ஆவது ஊதியக்குழுவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என வலி யுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தருமபுரி மாவட்டம் முழுவதும் வெள்ளியன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு ஊரக வளர்ச்சித்துறை அலு வலர் சங்க மாவட்டத் தலைவர் முக மது இலியாஸ் தலைமை வகித்தார். இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் சங்கர், முன் னாள் தலைவர்கள் ஏ.சேகர், சி. காவேரி ஆகியோர் பேசினர். வேளாண்மை துணை இயக்குநர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் ஜெயவேல் கண்டனவு ரையாற்றினார். கடத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், சங்கத் தின் மாவட்டத் தலைவர் எம்.சுருளி நாதான், பொருளாளர் அன்பழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று, அனுமந்தபுரம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, நல்லம் பள்ளி, பென்னாகரம் உள்ளிட்ட பகு திகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில், சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் ஏ.தெய்வானை, துணைத்தலை வர் கிருஷ்ணமூர்த்தி, ஊரக வளர்ச் சித்துறை அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் இளங்குமரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். சேலம் இதேபோன்று, சேலம் மாவட் டம் முழுவதும் அரசு ஊழியர் சங் கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இதில் சங்கத்தின் மாவட் டச் செயலாளர் பு.சுரேஷ், தலை வர் ந.திருவேரங்கன், பொருளாளர் சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.