ஒகேனக்கல் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடுக
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தருமபுரி, ஜூலை 15- சுற்றுலாவை நம்பியுள்ள ஒகே னக்கல் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், வருவாய் இழந்த மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். மாதக்கணக்கில் மூடப்பட்டுள்ள ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தை மீண்டும் திறக்க வேண்டும். நீர்வ ரத்து குறைந்தாலும் சுற்றுலாத் தலத்தை திறப்பதை தள்ளிப் போடாக்கூடாது. சுற்றுலாவை நம் பியுள்ள படகு, சமையல், விடுதி கள், சிறு குறு மற்றும் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். மழை வெள்ளக்காலங்களில் உபரிநீர் செல்லும் காலம் வரை சுற்றுலாவை நம்பி உள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். அதிகாரிகளின் விருப்பத்திற்கு ஏற்ப சுற்றுலா தலத்தை திறப்பது, மூடுவது என்ற நடைமுறையை கைவிட வேண் டும். தொழிலாளர்களின் கோரிக் கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி, வெள்ளப்பெருக்கு காலத் தில் சுற்றுலாப் பயணிகளை அனு மதிப்பதற்கான நிரந்தர தீர்வு காண வேண்டும். மீன்பிடித் தொழிலாளர் களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்க வேண் டும். காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். வருவாய் இல்லாத சுற்றுலா தடைக்காலங்க ளில் வனத்துறை, சுற்றுலாத்துறை, ஊராட்சி ஒன்றியங்கள் மூலம் வாடகை வசூலிப்பதை கைவிட வேண்டும், உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், ஒகேனக் கல் பேருந்து நிலையம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சி யின் ஒன்றியச் செயலாளர் ஆர். ஜீவானந்தம் தலைமை வகித்தார். இதில் மாநிலக்குழு உறுப்பினர்கள் பி.டில்லிபாபு, ஏ.குமார், மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் சோ.அருச்சுனன், வே.விசுவ நாதன், மாவட்டக்குழு உறுப்பினர் கள் கே.என்.மல்லையன், கே. அன்பு, ஒன்றியக்குழு உறுப்பினர் என்.மாரிமுத்து மற்றும் ஒகேனக் கல் கிளைச் செயலாளர்கள் வர தன், செல்வம், கிருஷ்ணன் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.