முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
கோவை, ஜூலை 1- தலைமை ஆசிரியர் பதவி உயர்வு நடத்துவதற்கான அறிவிப்பும். அட்டவணை யும் வெளியிட வலியுறுத்தி தமிழ்நாடு முதுநிலைப்பட்ட தாரி ஆசிரியர் கழகத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். பள்ளிக்கல்வித்துறைக்கு நடப்பாண்டிற் கான பொதுமாறுதல் கலந்தாய்வும், மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர் வும் நடத்துவதற்கான உடனடியான அறிவிப் பும் அட்டவணையும் வெளியிட வேண்டும். 100% தேர்ச்சி குறைவிற்கு ஆசிரியர்கள் மட் டுமே காரணம் என்ற வகையில் எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் திங்களன்று கோவை மாவட்டம், உக்கடத்தில் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் மு.முகமது காஜா முகைதீன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர் க.சாலமன்ராஜ், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைச் செயலா ளர் ஏ. தங்கபாசு, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் சி. அரசு, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ச. ஜெகநாதன் உள் ளிட்டோர் உரையாற்றினர். ஈரோடு ஈரோடு மாவட்டம், முதன்மை கல்வி அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரி யர் கழக மாவட்டத் தலைவர் எச்.சுதாகுமார் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பிரகதீஸ்வரன் வரவேற்றார். சகோதர சங்க நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர். திரளான ஆசிரியர்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத் தின் நிறைவாக கல்வி மாவட்டச் செயலா ளர் செந்தில் நன்றி கூறினார்.