அஞ்சல் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சேலம், ஜூலை 8- 8 ஆவது சம்பளக்குழுவை உடனடியாக அமைக்க வேண் டும் என வலியுறுத்தி அஞ்சல் துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அஞ்சல் துறை ஊழியர் சங் கங்களுக்கு பறிக்கப்பட்ட அங்கீ காரத்தை மீண்டும் வழங்க வேண்டும். ஐடிசி திட்டத்தை கைவிட வேண்டும். 8 ஆவது சம்பளக்குழுவை ஒன்றிய அரசு உடனடி யாக அமைக்க வேண்டும். அஞ்சல் சட்டம் 2023யை திரும்பப்பெற வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம், தபால்காரர் மற்றும் பன்முக திறன் ஊழியர் சங்கம், அகில இந் திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, அஞ்சல் ஊழியர் சங்க கோட்டத் தலைவர் எம்.நவீன் குமார் தலைமை வகித்தார். இதில் பெஞ்ச னர்ஸ் அசோசியேசன் சங்க தலைவர் நேதாஜி சுபாஷ், அஞ்சல் ஊழியர் சங்க கோட்டச் செய லாளர் ஜெயந்தன், கிழக்கு கோட்டத் தலை வர் ஆர்.மோகன் உட்பட பலர் கலந்து கொண் டனர்.