tamilnadu

img

கூடுதலாக காவலர்கள் நியமிக்கக்கோரி மனு

கூடுதலாக காவலர்கள் நியமிக்கக்கோரி மனு

நாமக்கல், ஜூலை 25- எலச்சிபாளையம் காவல் நிலையத் தில் கூடுதலாக காவலர்கள் நியமிக்கக் கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் ‘உங்களு டன் ஸ்டாலின்’ முகாமின் மனு அளித்த னர். நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு வட்டம், எலச்சிபாளையத்தில் காவல் நிலையம் துவங்குவதற்கு முன்பு இலுப்புலியில் காவல் நிலையம் 1918 ஆம் ஆண்டு இருந்தது. அங்கிருந்த காவல் நிலையம் எலச்சிபாளையத் திற்கு மாறுதல் செய்யப்பட்டு, தற்போது வரை செயல்பட்டு வருகிறது. இதற் கென்று சுமார் 2 ஏக்கர் அளவில் காவல் நிலையம் மற்றும் காவலர்கள் குடியி ருப்பு வளாகம் கட்டப்பட்டுள்ளது. மக் கள் தொகை பெருக்கத்திற்கேற்ப கூடுதல் காவலர்கள் இல்லாததால், தொடர்  திருட்டுகள் மற்றும் போதைப் பொருட் கள் புழக்கம் அதிகரித்துள்ளது. கடந்த 107 வருடங்களாக எலச்சிபாளையம் காவல் நிலையம் துவங்கிய காலத் தில் இருந்து தற்போது வரை 14 காவ லர்கள் மட்டுமே உள்ளனர். அனைத்து துறைகளிலும் கூடுதல் அரசு ஊழியர் கள் நியமிக்கும் சூழலில், எலச்சிபாளை யம் காவல் நிலையத்தில் மட்டும் கூடு தல் காவலர்கள் இல்லாத நிலை பொது மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தரு கிறது. இந்நிலையில், எலச்சிபாளை யம் சமுதாய நலக்கூடத்தில் வெள்ளி யன்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டா லின் முகாமில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் சு.சுரேஷ் தலைமையில் மனு அளிக் கப்பட்டது. காவல் உதவி ஆய்வாளர் வேலுமணி மனுவை பெற்றுக் கொண் டார்.