முன்னாள் படை வீரர்களுக்கான சட்ட ஆலோசனை மையம் திறப்பு
ஈரோடு, ஆக.21- ஈரோட்டில் முன்னாள் படை வீரர்களுக்கான சட்ட ஆலோ சனை மையத்தை முதன்மை மாவட்ட நீதிபதி எஸ்.சமீனா திறந்து வைத்தார். ஈரோடு காந்திஜி சாலை, படைவீரர் மாளிகையில் மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு ஆணையின்படி, முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந் தோருக்கான சட்ட ஆலோசனை மையத்தை முதன்மை மாவட்ட நீதிபதி எஸ்.சமீனா வியாழனன்று திறந்து வைத் தார். இதன்பின் அவர் பேசகையில், பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் வழக்கு இருந்தால் மட்டுமே நீதிமன்றத்தை அணுக வேண்டுமென எண்ணுகின்றனர். ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது மட்டுமின்றி சமரச மையம், மக்கள் நீதி மன்றம், சட்ட ஆலோசனை மையங்கள் செயல்பட்டு வரு கிறது. இதன் மூலம் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், வயதா னோர், எஸ்.சி/எஸ்டி பிரிவினருக்கு தேவையான சட்ட உதவி இலவசமாக வழங்கப்படும். சொத்து, குடும்ப பிரச்சனை உள் ளிட்டவற்றிக்கு ஆலோசனை மையம் மூலம் நடுநிலையாக ஆலோசனை வழங்கப்படும். மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) மூலம் 8 வகைப்பாடுகளில் வழக்கு தொடரப்பட்டு தீர்வு வழங்கப்படும். சட்ட ஆலோசனை மையம் வாரந் தோறும் வெள்ளிக்கிழமை மாலை 3 மணி முதல் 5 மணி வரை இந்த ஆணைக்குழு வழக்கறிஞர் அல்லது சட்ட தன்னார்வ லர் வருகை புரிந்து தங்குளுக்கு ஏற்படும் சட்டம் குறித்த சந்தே கங்கள் மற்றும் சட்ட உதவிகளை வழங்குவார்கள். மேலும், விபரங்களுக்கு 0424 2902105 மற்றும் 15100 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம், என்றார்.