tamilnadu

img

புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிடுக நீலகிரி சிஐடியு மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிடுக நீலகிரி சிஐடியு மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

உதகை, செப். 29- மலை மாவட்டமான நீலகிரியில் உள்ள படித்த இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க ஒன் றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியு நீலகிரி மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) 11ஆவது மாவட்ட மாநாடு ஞாயிறன்று உதகையில் நடை பெற்றது. மாநாட்டின் முதல் நிகழ்வாக  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, தியாகிகள் மற்றும் தலை வர்களின் நினைவு ஜோதிகள் சேரிங் கிராஸ் பகுதியில் உள்ள பெரியார் நினைவு சதுக்கம் அருகில் கொண்டு வரப்பட்டது. பின்னர், சிஐடியு மாவட்டத்  தலைவர் எல்.சங்கரலிங்கம் தலை மையில் பேரணி புறப்பட்டு  ஒய்.பி.ஏ.  மாநாட்டு அரங்கத்தை வந்த டைந்தது. இதனைத்தொடர்ந்து, பந்தலூரில் இருந்து கொண்டுவரப்பட்ட மாநாட்டு கொடியையும், கூடலூரில் இருந்து கொண்டுவரப்பட்ட கொடி கயிறும் பெறப்பட்டு, மாநாட்டு அரங்கத்தின் முன்பு சங்கத்தின் நிர்வாகிகளில் ஒருவரான ஜே.ஆல்தொரை கொடியேற்றினார். இதனையடுத்து, மாநாட்டில், பி.கணேசன், அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். வரவேற்புக் குழு  தலைவர் வி. ஏ. பாஸ்கரன் வர வேற்றார். மாநாட்டை துவக்கிவைத்து, சிஐடியு மாநிலச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் சி.வினோத் வேலை அறிக்கையும், பொருளாளர் எ.நவீன் சந்திரன் வரவு செலவு அறிக் கையும் முன்வைத்தனர். மாநாட்டை வாழ்த்தி, தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.யோகண்ணன், விவசாயத் தொழி லாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம். பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர். இதில், நீலகிரியில் உள்ள படித்த  இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். தோட்டத் தொழிலாளர்களுக்கு இலவச  வீடும், நிலமும் வழங்க வேண்டும். நியாயமான கோரிக்கைகளுக்காக தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தி வரும் போக்குவத்து தொழிலா ளர்களின் கோரிக்கைகளை உடன டியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். ஆஷா, அங்கன்வாடி உள் ளிட்ட பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, சிஐடியு நீலகிரி மாவட்டத் தலைவராக  கே.ஜே.வர்கீஸ்,  செயலாளராக சி.வினோத், பொருளா ளராக ஏ.நவீன் சந்திரன் உள்ளிட்ட 15  பேர் கொண்ட நிர்வாகிகளும் 30  பேர் கொண்ட மாவட்டக் குழு உறுப்பி னர்களும் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டை நிறைவு செய்து, சிஐடியு   மாநிலச் செயலாளர் கே. ரங்கராஜ் உரை யாற்றினார். முடிவில், சி.கிருஷ்ணன் நன்றி கூறினார்.