tamilnadu

img

போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை பேசித் தீர்த்திடுக

போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை பேசித் தீர்த்திடுக

தருமபுரி, செப்.19- 33 ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம் தொடரும் நிலையில், போக்குவரத்து ஊழியர்களின் கோரிக் கைகளை பேசி தீர்க்க வலியுறுத்தி சிஐ டியு-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். போக்குவரத்து கழகங்களின் வர வுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகையை ஈடுசெய்ய, பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பணப்பலன் கள் மற்றும் அகவிலைப்படி உயர்வை முழுமையாக உடனடியாக வழங்க வேண் டும். பழைய பென்சன் திட்டத்தை அமல் படுத்த வேண்டும். அனைத்து பிரிவு களிலும் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். ஒப்பந்த முறை, தனியார்மய நடவடிக்கைகளை கைவிட வேண்டும். பராமரிப்புக்கு தேவையான தரமான உதிரி பாகங் களை வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்கு வரத்து கழக ஊழியர் சங்கம் மற்றும்  ஓய்வூதியர் சங்கத்தினர் கடந்த 33 நாட்க ளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர். ஊழியர்களின் கோரிக்கைகளை பேசித் தீர்வு காண  வேண்டும் என வலியுறுத்தி வெள்ளி யன்று மாநிலம் முழுவதும் இந்திய தொழிற்சங்க மையத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி பிஎஸ் என்எல் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு மாவட்டத் தலைவர் சி.கலாவதி தலைமை வகித்தார். இதில் மாநிலச் செயலாளர் சி.நாகராசன், மாவட்டப் பொருளாளர் எஸ்.சண்முகம், மாவட்ட துணைத்தலைவர்கள் சி.முரளி, சி.ரகு பதி, போக்குவரத்து கழக ஊழியர் சங்க  மாவட்டப் பொருளாளர் மயில்சாமி உட் பட பலர் கலந்து கொண்டனர். சேலம் சேலம் மாவட்டம், மெய்யனூர் போக்குவரத்து பணிமனை முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் பி.பன்னீர் செல்வம் தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செயலாளர் சி.கோவிந்தன், மாவட்ட துணைத்தலைவர் ஆர்.வெங் கடபதி, மாவட்டப் பொருளாளர் வி. இளங்கோ, மாநிலக்குழு உறுப்பினர் விஜயலட்சுமி மற்றும் சிஐடியு-வுடன்  இணைக்கப்பட்ட சங்கங்களின் நிர்வாகி கள் உட்பட 100க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் கலந்து கொண்டனர். ஈரோடு ஈரோடு, வீரப்பன்சத்திரத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு மாவட்டப் பொருளாளர் வி.சுரேஷ்பாபு தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செயலாளர் கே.மாரப்பன், துணைத் தலைவர் வி.பாண்டியன், போக்குவ ரத்து ஊழியர் சங்க பன்முகத் தலை வர்  என்.முருகையா, நிர்வாகி ஆர்.செந் தில்குமார் உட்பட பலர் கலந்து கொண் டனர். நாமக்கல் நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.அசோ கன் தலைமை தாங்கினார். இதில், மாநில துணைத்தலைவர் ஆர்.சிங்கார வேலு அங்கன்வாடி மற்றும் உதவியா ளர் சங்க மாநில பொதுச்செயலாளர் டெய்சி, சிஐடியு மாவட்டச் செயலாளர் என்.வேலுச்சாமி, அரசு போக்குவரத்து ஊழியர் சங்க தலைவர் வரதராஜன் ஆகியோர் உரையாற்றினர். இதில், நாமக்கல் பணிமனை கிளைச் செய லாளர் பெரியசாமி, சம்மேளன நிர்வாகி கலைச்செல்வன், சிஐடியு மாவட்ட  உதவிச்செயலாளர்கள் ஜெயக்கொடி,  சிவராஜ், சுரேஷ், தனபால் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.