tamilnadu

img

கும்மிடிப்பூண்டியில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடவடிக்கை கோரி மாதர்சங்கம் மனு

கும்மிடிப்பூண்டியில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடவடிக்கை கோரி மாதர்சங்கம் மனு

திருவள்ளூர், ஜூலை 20- கும்மிடிப்பூண்டியில் ஒரே நாளில் இரண்டு சிறுமிகள் பாலி யல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதை தொடர்ந்து, இதில் ஈடுபட்ட கயவர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திரு வள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சனிக்கிழமை யன்று மாதர் சங்கத்தின் சார்பில் மனு அளித்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில்,  பெண்கள்  குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள், பாலியல் வன்புணர்வு  அதி கரித்து வருகிறது. இதில் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில், 4ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி கடந்த சனிக்கிழமையன்று (ஜூலை 12),  பள்ளி சென்று வீட்டிற்கு திரும்பும் போது பட்டப்பகலில் இளைஞர் ஒருவர்,  பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதேபோல புது கும்மிடிப்பூண்டியில் ஜூலை 12 அன்று  அரசு பள்ளியில் படிக்கும் 11ஆம் வகுப்பு சிறுமி கூட்டு பாலி யல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இச்சிறுமியும் அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவ்வாறு திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை நடை பெற்றுக் கொண்டு வருவதை  மாதர்சங்கம் வன்மையாக  கண்டித்துள்ளது. கும்மிடிப்பூண்டி பகுதியில் தொடர்ந்து பாலியல் குற்றங்கள் நடைபெறுவதால், இதற்காக சிறப்பு தனிப் படைகளை அமைத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடன டியாக கைது செய்து கடுமையாக தண்டிக்கவேண்டும்,  பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டும், பாதுகாப்பு மற்றும் நிவாரணம் வழங்கவும் வேண்டுமென அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம்  சார்பில்  மனு அளித்தனர். இதில் மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.பத்மா, மாவட்ட துணை தலைவர் என்.கீதா,  மாவட்ட துணைச் செய லாளர் எஸ்.ரம்யா,  திருவள்ளூர் பகுதி செயலாளர் இ.கலை வாணி, துணைச் செயலாளர் எம்.உதயநிலா ஆகியோர் கலந்து கொண்டனர்.