tamilnadu

img

மாதர் சங்க நங்கவள்ளி ஒன்றிய மாநாடு

மாதர் சங்க நங்கவள்ளி ஒன்றிய மாநாடு

சேலம், ஜூலை 21- மாதர் சங்கத்தின் நங்கவள்ளி ஒன்றிய மாநாட்டில் நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்டனர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சேலம் மாவட்டம், நங்கவள்ளி ஒன்றிய 8 ஆவது மாநாடு ஞாயி றன்று, ஜலகண்டபுரத்தில் தோழர் பிருந்தா நினைவரகத் தில், ஒன்றியத் தலைவர் எம்.கார்த்திகாதேவி தலைமையில்  நடைபெற்றது. மாநாட்டு கொடியை ஏற்றி வைத்து, சங்கத் தின் மாவட்டத் தலைவர் ஆர்.வைரமணி துவக்கவுரையாற்றி னார். முன்னதாக, பல்வேறு பகுதிகளிலிருந்து மாதர் சங்க  மறைந்த தலைவர்களின் புகைப்படங்கள் கொண்டு வரப்பட் டன. ஒன்றியச் செயலாளர் ஜி.கவிதா, பொருளாளர் எம்.பாரதி ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்தனர். முன்னாள் ஒன்றி யச் செயலாளர் ஆர்.கிருஷ்ணவேணி வாழ்த்திப் பேசினார். பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்டங்கள் குறித்து வழக்கறிஞர் பிரித்திகா பேசினார். இம்மாநாட்டில், நுண் நிதி நிறுவனங்களின் அடாவடி வசூலை தடுத்து  நிறுத்தி, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மானியத்துடன் நான்கு சதம் வட்டியில் அரசு வங்கியில் கடன் வழங்க வேண் டும். ஜலகண்டபுரம் அரசு மருத்துவமனையை தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி, கூடுதலான மருத்து வர்களையும், செவிலியர்களையும் நியமிக்க வேண்டும்  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொ டர்ந்து, சங்கத்தின் ஒன்றியத் தலைவராக தானம்மாள், செய லாளராக ஜி.கவிதா, பொருளாளராக பாரதி உட்பட 15 பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்ட துணைத்தலைவர் கே.ராஜாத்தி நிறைவுரையாற்றினார். முன்னதாக, மாதர் சங்க பெண்களின் விடுதலை கும்மியும், பாலர் சங்க குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகளும் நடை பெற்றன.