tamilnadu

img

மாதர் சங்க பென்னாகரம் ஒன்றிய மாநாடு

மாதர் சங்க பென்னாகரம் ஒன்றிய மாநாடு

தருமபுரி, ஜூலை 20- மாதர் சங்கத்தின் பென்னாகரம் மேற்கு ஒன்றிய மாநாட் டில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தருமபுரி  மாவட்டம், பென்னாகரம் மேற்கு ஒன்றிய 5 ஆவது மாநாடு, கூத் தப்பாடி திரௌபதி அம்மன் கோவில் மண்டபத்தில் ஞாயி றன்று நடைபெற்றது. ஆ.ஜோதி தலைமை வகித்தார். மாநாட் டுக் கொடியை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கமலா  ஏற்றி வைத்தார். சங்கத்தின் மாவட்டத் தலைவர் அ.ஜெயா  துவக்கவுரையாற்றினார். ஒன்றியச் செயலாளர் எம்.வளர் மதி அறிக்கையை முன்வைத்தார். மாவட்டச் செயலாளர் ஆர். மல்லிகா வாழ்த்திப் பேசினார். இதைத்தொடர்ந்து, சங்கத்தின்  ஒன்றியத் தலைவராக தங்கம், செயலாளராக சரண்யா, பொரு ளாளராக ரத்தினம் உட்பட 11 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது. மாநில பொதுச்செயலாளர் ஏ. ராதிகா நிறைவுரையாற்றினார். அம்பிகா நன்றி கூறினார்.