tamilnadu

img

கோவையில் 300 கிலோவிற்கும் மேற்பட்ட கஞ்சா மற்றும் குட்கா காவல்துறையினரால் அழிப்பு

கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 300 கிலோவிற்கும் மேல் கஞ்சா, குட்கா ஆகியவை கோவை செட்டிப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ தொழிற்சாலையில் வைத்து அழிக்கப்பட்டது. 
தமிழகம் முழுவதும் போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலைத் தடுக்கும் பொருட்டு காவல்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மேற்கு மண்டலத்திற்குட்பட்ட 9 மாவட்டங்களில் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ள காவல்துறைகஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மொத்த  கும்பலையும் கைது செய்துள்ளனர். 
இதில்  காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 300 கிலோவிற்கும் மேல் உள்ள கஞ்சாவை  தனியார் தொழிற்சாலையில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் முன்னிலையில் எரித்தனர்.