tamilnadu

இந்தாண்டில் 4 ஆவது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை

இந்தாண்டில் 4 ஆவது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை

சேலம், ஜூலை 26- காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, நீர்வரத்து அதிகரித்து, இந்தாண் டில் 4 ஆவது முறையாக மேட்டூர் அணை நிரம்பியுள்ளது. கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட் டியே பெய்ய துவங்கியது. இதன்  காரணமாக நீர்வரத்து அதிகரித்து,  கிருஷ்ணராஜ சாகர், கபினி அணை கள் நிரம்பியது. இதையடுத்து இந்த அணைகளில் இருந்து உபரிநீர் தமி ழகத்துக்கு காவிரி ஆற்றில் திறந்து  விடப்பட்டது. இதன் காரணமாக இந் தாண்டில் முதல் முறையாக கடந்த ஜூன் 29 ஆம் தேதி மேட்டூர் அணை  நிரம்பியது. இதன்பின் மழையின்  தீவிரத்தை பொறுத்து அணைக்கு  நீர்வரத்து அதிகரித்தும், குறைந் தும் வந்து கொண்டிருந்தது. ஆனா லும் தொடர்ந்து டெல்டா பாசனத் துக்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் குறைவதும், அதிகரிப்பதுமாக இருந்து வருகி றது. இதனடிப்படையில் மேட்டூர்  அணை இந்தாண்டில் 2 ஆவது  முறையாக கடந்த ஜூலை 5 ஆம்  தேதியும், 3 ஆவது முறையாக கடந்த ஜூலை 20 ஆம் தேதியும் நிரம்பியது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த தன் காரணமாக வெள்ளியன்று மாலை இந்தாண்டில் 4 ஆவது முறையாக மேட்டூர் அணை நிரம்பி யது. இதையடுத்து உடனடியாக பாதுகாப்பு கருதி அணையில் இருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்நிலையில், சனியன்று நில வரப்படி அணையிலிருந்து 45  ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. மேலும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 400 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து நீர்மின் நிலையம் மற்றும் 16 கண்  மதகு வழியாக காவிரி ஆற்றில் தண் ணீர் திறப்பு விநாடிக்கு 27 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதன் காரணமாக தங்கமாபுரிபட் டணம், அண்ணாநகர், பெரியார் நகர், சேலம் கேம்ப் பகுதிகளில் பொதுமக்கள் காவிரி ஆற்றில் குளிக்கவோ, இறங்கவோ கூடாது. ஆற்றில் ஆபத்தான முறையில் புகைப்படம் எடுக்கக்கூடாது என் றும் ஒலிபெருக்கி மூலம் வெள்ள  அபாய எச்சரிக்கை விடுக்கப்பட் டது. மேலும், காவிரி கரையோரம் உள்ள சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி உள்ளிட்ட 13 மாவட் டங்களில் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

ஒகேனக்கல் அருவியில் குளிக்க தடை